சினிமா

”கருப்பு திராவிடன்... தமிழன்” - மீண்டும் ஒரு சம்பவம் செய்த யுவன் சங்கர் ராஜா; வைரலாகும் போட்டோ!

‘கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்’ எனக் குறிப்பிட்டுள்ள யுவன் சங்கர் ராஜா கடற்கரையோரம் கருப்பு நிற உடை அணிந்தபடி நின்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

”கருப்பு திராவிடன்... தமிழன்” - மீண்டும் ஒரு சம்பவம் செய்த யுவன் சங்கர் ராஜா; வைரலாகும் போட்டோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்த துடித்து வருகிறது.

ஆனால அவர்களின் எந்த அசைவுக்கும் இசைவு கொடுக்கும் வகையில் இருந்திடாமல் தமிழ்தான் எங்கள் தாய் மொழி என்ற கொள்கையை நெஞ்சில் ஏந்தி தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக அரசு, அரசியல் கட்சிகள், மக்கள், சமூக மற்றும் மொழி ஆர்வலர்கள் போர்க்குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

அதே வகையில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

அதன்படி ஆஸ்கர் விருது மேடையிலேயே தமிழில் பேசி விருதை கையில் வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் மொழிதான் என அண்மையில் பேசியிருந்தார். மேலும், ழகரம் ஏந்திர தமிழணங்கு ஓவியத்தையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவொன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், “Dark Dravidian , Proud Tamizhan” அதாவது, ‘கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்’ எனக் குறிப்பிட்டுள்ள யுவன் சங்கர் ராஜா கடற்கரையோரம் கருப்பு நிற உடை அணிந்தபடி நின்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டு ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடந்த கருத்தரங்கில் ‘இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம்’ என அந்த அமைச்சக செயலாளரே கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அப்போதும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், மெட்ரோ பட நாயகன் சிரிஷும் இந்தி தெரியாது போடா, Im a தமிழ் பேசும் Indian போன்ற வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட் அணிந்து பதிவிட்டிருந்தார்கள்.

அதனையடுத்து பலரும் அதே வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories