சினிமா

சூர்யாவின் 2D நிறுவனம் பெயரில் மோசடி.. போலிஸில் புகார்: நடந்தது என்ன?

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் பெயரில் மோசடி நடந்துள்ளதாக போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

என்.ஜி.கே. படத்தில் சூர்யா.
என்.ஜி.கே. படத்தில் சூர்யா.
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமல்லாமல் 2D எண்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரில் போலி முகவரி மூலம் நடிகர், நடிகைகள் தேர்வுக்கு அழைத்து மோசடி செய்வதாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 2D நிறுவனமும் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் லோகோவை பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் சில மோசடியான நபர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இருப்பதை அறிந்தோம்.

இந்த ஏமாற்று வேலை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். 2D என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆடிஷன் நடத்துவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை இது போன்ற ஆடிஷன் நடத்துவதில்லை. மேலும் ஆடிஷன்களுக்கு நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை.

எனவே இத்தகைய போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களுடைய ரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்குமாறும் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 2D என்டர்டைன்மென்ட் முதன்மை நிர்வாக அதிகாரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories