சினிமா

நெப்போடிசம் எதிரொலி: ஆலியா பட்டின் சதக் 2 ட்ரெய்லருக்கு 11 மில்லியன் டிஸ்லைக்ஸ்: உலக அளவில் 3வது இடம்..!

பாலிவுட்டில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதால் நெட்டிசன்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள்.

நெப்போடிசம் எதிரொலி: ஆலியா பட்டின் சதக் 2 ட்ரெய்லருக்கு  11 மில்லியன் டிஸ்லைக்ஸ்: உலக அளவில் 3வது இடம்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட்டின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்துக் கொண்ட பிறகு இந்தி திரையுலகம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது.

பிரபலங்கள் பலர் தங்களுடைய வாரிசுகளுக்கே தொடர்ந்து பட வாய்ப்புகள் அளித்து வருவதால் திறமையான புது முகங்களுக்கு வாயில்களே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக கரண் ஜோஹர், சல்மான் கான், ஆலியா பட் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் என பல்வேறு பிரபலங்கள் மீது நெப்போடிசம் குறித்த கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் காரணமாக இந்தி திரையுலக முன்னணி பிரபலங்களை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் சடாரென குறைந்தது.

இந்த நிலையில், 1999ம் ஆண்டு சஞ்சய் தத், பூஜா பட் நடிப்பில் வெளியான சதன் படத்தின் இரண்டாம் பாகமான சதன் 2 படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தை ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் இயக்கி தயாரித்துள்ளார். சஞ்சய் தத், பூஜா பட், ஆதித்யா ராய் கபூர் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் சதக் 2 படம் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியான ஒரே நாளில் 5 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.

தற்போது சதன் 2 ட்ரெய்லருக்கான டிஸ்லைக்குகள் 11 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனால் படக்குழுவினர் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். உலக அளவில் அதிகமான டிஸ்லைக்குகளை பெற்ற வீடியோக்களில் சதக் 2 ட்ரெய்லர் 3வது இடத்தில் உள்ளது.

பாலிவுட்டில் தலைத்தோங்கி இருக்கும் நெப்போடிசமே இதற்கு முழுமுதற் காரணமாக கூறப்படுகிறது. அதேச்சமயத்தில் இந்த ட்ரெய்லரை இதுவரையில் 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories