சினிமா

இந்தியாவில் முதல்முறையாக பிரம்மாண்ட இடத்தில் நடக்கப்போகும் ’சூரரைப் போற்று’ இசை வெளியீட்டு விழா !

சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக பிரம்மாண்ட இடத்தில் நடக்கப்போகும் ’சூரரைப் போற்று’ இசை வெளியீட்டு விழா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் 6 ஆண்டுகளாக சொல்லிக்கொள்ளும்படியாக எந்த வெற்றியும் இல்லாமல், தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நடிகர் சூர்யா தற்போது ’சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

’ஏர் டெக்கான்’ நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படமாக சூரரைப் போற்று உருவாகி வருகிறது. இதனை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

படத்தின் டீசர், தீம் பாடல் அண்மையில் வெளியாகி சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகவுள்ளது படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் முதல்முறையாக பிரம்மாண்ட இடத்தில் நடக்கப்போகும் ’சூரரைப் போற்று’ இசை வெளியீட்டு விழா !

இதில், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் ட்ரெய்லருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தகவல் ஒன்று வெளி வந்துள்ளது. சூரரைப் போற்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக சிறப்பு அனுமதியை படக்குழு பெற்றுள்ளதாம். விமானி மற்றும் விமானம் தொடர்பான படம் என்பதால் இவ்வாறு புதுமையாக இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் படம் ரிலீசாகவுள்ளது, மூன்று திரைத்துறையில் இருந்து முக்கிய நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளனராம்.

banner

Related Stories

Related Stories