சினிமா

மெர்சல் விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்தவருக்கு சம்பள பாக்கி - வழக்கு தொடரப் போவதாக எச்சரிக்கை!

மெர்சல் படத்தில் பணிபுரிந்ததற்காக தமக்கு வழங்கவேண்டிய சம்பள பாக்கி தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக மேஜிக் கலைஞர் ராமன் ஷர்மா கூறியுள்ளார்.

மெர்சல் விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்தவருக்கு சம்பள பாக்கி - வழக்கு தொடரப் போவதாக எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் மெர்சல். இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக ஹேமா ருக்மணி தயாரித்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். அதில் மேஜிக் நிபுணராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்திற்காக விஜய்க்கு கனடா நாட்டு மேஜிக் கலைஞரான ராமன் ஷர்மா மேஜிக் கற்றுக் கொடுத்தார். மெர்சல் படத்தில் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சம்பள பாக்கி தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோவில், "மெர்சல் படத்தில் மேஜிக் கற்றுக்கொடுத்ததற்காக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் எனக்கு 4 லட்ச ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் சம்பள பாக்கியை பலமுறை கேட்டும் பதில் ஏதும் வரவில்லை. எனவே சென்னை வந்து வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர் உள்ளேன்.

சென்னை வந்திருந்தபோது நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ ஆகியோரை பிகில் படத்தின் படப்பிடிப்பில் பார்த்தேன். அவர்களிடம் சம்பள பிரச்சனை குறித்து பேசவில்லை. இந்த பிரச்சனைக்குள் அவர்களை இழுக்க நான் விரும்பவில்லை. மெர்சல் படத்தில் பணிபுரிந்த சிலரை பார்த்தபோது அவர்களுக்கும் சம்பள பாக்கி இருப்பதை தெரிந்து கொண்டேன்.

தேனாண்டாள் நிறுவனம் பொருளாதார சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதன் உரிமையாளர்களில் ஒருவரான ஹேமா ருக்மணியின் ஷாப்பிங் பதிவுகளை பார்க்கும்போது அவர்கள் பண கஷ்டத்தில் இருப்பதாக நம்ப முடியவில்லை. நான் கஷ்டப்பட்டு உழைத்ததற்கான சம்பளத்தை வாங்காமல் விடப்போவதில்லை '' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories