உலகம்

டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை : அரசுக்கு எதிராக செயல்பட்ட புகாரில் நீதிமன்றம் அதிரடி !

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை : அரசுக்கு எதிராக செயல்பட்ட புகாரில் நீதிமன்றம் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிடத்தில் டிரம்ப்பின் ஆதரவாளர்களும், வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த சிலரும், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த பாதுகாப்பு படையினர் அவர்களைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை : அரசுக்கு எதிராக செயல்பட்ட புகாரில் நீதிமன்றம் அதிரடி !

அப்போது, பாதுகாப்பு படையினரிடையே மோதலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட டிரம்ப்பின் ஆதரவாளர்கள், பாதுகாப்பு படையினரை தாக்கிவிட்டு நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து கலவரங்களில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த கலவரத்தை முன்னாள் அதிபர் டிரம்ப் தூண்டி விட்டதாக கொலராடோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிரம்பை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவோர் பதவியில் இருக்க முடியாது என்ற சட்டத்தின் மூலம் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதன்மைத் வேட்பாளராக போட்டியிடுவதிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories