உலகம்

உக்ரைன் தரப்பில் 90,000 வீரர்கள், 600 டாங்கிகள், 1,900 கவச வாகனங்கள் இழப்பு - ரஷ்யா அமைச்சர் அறிவிப்பு !

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தரப்பில் 90,000 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தரப்பில் 90,000 வீரர்கள்,  600 டாங்கிகள், 1,900 கவச வாகனங்கள் இழப்பு - ரஷ்யா அமைச்சர் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

உக்ரைன் தரப்பில் 90,000 வீரர்கள்,  600 டாங்கிகள், 1,900 கவச வாகனங்கள் இழப்பு - ரஷ்யா அமைச்சர் அறிவிப்பு !

இந்த நிலையில், இந்த போரில் உக்ரைன் தரப்பில் 90,000 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu, இந்த போரில், உக்ரைன் 90,000 வீரர்கள், 600 டாங்கிகள், 1,900 கவச வாகனங்கள் போன்றவற்றை இழந்துள்ளதாக கூறியுள்ளார்,

மேலும், உக்ரைன் தரப்பில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரம் உக்ரைன் எந்தவொரு முக்கிய வெற்றியையும் அடையவில்லை என்றும் கூறியுள்ளார். மோதலின் தீர்வு பற்றிய விவாதங்களுக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், இது குறித்து பேச்சுவார்தைக்கு ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories