உலகம்

அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் டிரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று 2021-ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?

தற்போது டிரம்ப் இருக்கும்போது இருந்த கலவரங்களை விட, ஜோ பைடன் ஆட்சி மக்கள் கொண்டுவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் அவரது ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. அதோடு அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள முக்கிய கட்சிகள் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?

அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் களமிறக்கப்படவுள்ளார். அதேபோல் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடவுள்ளார். இப்படி இருவருக்குள்ளும் போட்டி இருக்கும் நிலையில், இதே குடியரசுக் கட்சியை சேர்ந்த விவேக் ராமசாமி என்பவரும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதாவது ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு பேர் வரும் தேர்தலில் மோதவுள்ளனர். இருவரும் போட்யிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இரண்டு பேரும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவுகளை கோரி வருகின்றனர். டிரம்புடன் போட்டியிடவுள்ள விவேக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?

யார் இந்த விவேக் ராமசாமி :

விவேக் ராமசாமி (37), இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள். இவரது தந்தை வி.ஜி. ராமசாமி, கேரளாவில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் தனது படிப்பை முடித்து, பின்னர் அமெரிக்காவில் உள்ள ஒகையோ (Ohio) என்ற இடத்தில் General Electric Plant-ல் வேலை செய்தார். இவரது தாய் கீதா, ஒரு முதியோர் மனநல மருத்துவர் ஆவார்.

அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?

அமெரிக்கா, ஒகையோவிலுள்ள சின்சினாட்டி என்ற பகுதியில் பிறந்து வளர்ந்த விவேக், அங்கிருக்கும் பள்ளி, மற்றும் ஹார்வர்ட் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். தொடர்ந்து இசை, டென்னிஸ் விளையாட்டு உள்ளிட்டவைகளில் ஆர்வம் மிக்கவராகவே இருந்தார். அதன்பிறகு தனது வேலையில் கவனம் செலுத்தினார்.

அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?

2014-ல் ராமசாமி மருந்து தயாரிப்பு நிறுவனமான 'Roivant Sciences' என்ற நிறுவனத்தை நிறுவினார். இது மருந்து வளர்ச்சியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதில் 2021 வரை தலைமை நிர்வாக (CEO) அதிகாரியாக பணியாற்றினார்.

பின்னர் 2015 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழின் அட்டைப்படத்தில் ராமசாமி மருந்து மேம்பாட்டில் தனது பணிக்காக தோன்றினார். 2020 ஆம் ஆண்டில், ராமஸ்வாமி சேப்டர் மெடிகேரை இணை-ஸ்தாபித்தார், இது நுகர்வோர்-முதல் மெடிகேர் வழிசெலுத்தல் தளமாகும். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், Roivant Sciences இன் CEO பதவியில் இருந்து ராமசாமி விலகினார்.

அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?

ஓஹியோ பயோடெக் தொழிலதிபர் விவேக் ராமசாமி, தற்போது அரசியல் ஈடுபாடு மிக்கவராக காணப்படுகிறார். 2016-ல் டொனல்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதன் மூலம் அரசியல் ஈடுபாடு கொண்ட இவர், தற்போது அவரை எதிர்த்தே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதனை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் : டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் இந்திய வம்சாவளி வாலிபர்.. யார் இந்த விவேக் ராமசாமி ?

அமெரிக்காவில் கோடீஸ்வரராக இருக்கும் இவர், அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர் ஆவார். விவேக் ராமசாமி அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இவருடன் சேர்ந்து இவரது கட்சிக்குள்ளேயே அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப், நிக்கி ஹேலி என 10-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் முதலில் இவர்களுக்குள் தேர்தல் நடைபெறும்; அதில் வெற்றி பெறுபவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை விவேக் இதில் வெற்றி பெற்று, தேர்தலிலும் வெற்றிபெற்றால், இவர்தான் முதல் ஆசிய - அமெரிக்க அதிபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Related Stories