சமூக வலைதளங்களில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு நாட்டைப் பற்றிய செய்திகள் சர்வ சாதாரணமாக, அதுவும் பொய் செய்திகள் பரவுகிறது என்றால் அது வடகொரியா பற்றிய செய்திகளாகத்தான் இருக்கும்.
குறிப்பாக வட கொரியா பற்றிய வந்திகளும், அதிபர் கிம் பற்றி கிளம்பிவிடப்படும் பொய் குற்றச்சாட்டுகளும் உலக அளவில் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் கூட, வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், அவரது மரணம் குறித்த செய்தியை அந்நாட்டு அரசு மறைத்துவிட்டதாக பல்வேறு கட்டுக்கதைகளை சில குறிப்பிட்ட ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரப்பி வந்தன.
இதனையடுத்து கிம் ஜாங் உன்னுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் தென் கொரியா உயரதிகாரிகள் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில், அணு ஆயுத சோதனையை டிவி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய நெறியாளருக்கு அதிபர் கிம் ஜாங் பிரமாண்ட சொகுசு வீடு ஒன்றை பரிசு வழங்கியுள்ளார்.
வட கொரியாவைச் சேர்ந்த ரி சுன் ஹி என்ற பத்திரிக்கையாளர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள அரசு தொலைக்காட்சியில் 50 ஆண்டுகளுக்காக பணியாற்றி வருகிறார். அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தை கிம் இல் சங்-ல் 1994-ல் உயிரிழந்தபோதும் அதனைத்தொடர்ந்து 2006-ல் வடகொரியா முதல் அணு ஆயுத சோதனை நடத்தியது வரையில், அரசின் முக்கிய நிகழ்வுகளை ரி சுன் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் ரி சுன் பணியை பாராட்டி அதிபர் கிம் ஜோங் தலைநகர் பியோங்யங்கில், உள்ள பெரிய சொகுசு வீட்டை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த வீட்டை ரி சுனுக்கு கொடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதனிடையே அதிபர் ரி சுன் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் வட கொரியாவின் பொக்கிஷம் என ரி சுன் புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.