உலகம்

கடுமையான பஞ்சத்தில் ஆப்கானிஸ்தான்; கிட்னியை விற்று வாழ்க்கையை ஓட்டும் ஆப்கானியர்கள்!

இதுவரையில் சுமார் 2.2 கோடிக்கும் அதிகமான ஆப்கானியர்கள் பசியில் வாடி வருவதாக பொருளாதார வல்லுநர் அப்துல் நசீர் ரிஷ்டியா கூறியிருக்கிறார்.

கடுமையான பஞ்சத்தில் ஆப்கானிஸ்தான்; கிட்னியை விற்று வாழ்க்கையை ஓட்டும் ஆப்கானியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்களின் ஆதிக்கம் தலைத் தூக்கத் தொடங்கியதில் இருந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானுடனான வணிகத்தை நிறுத்தின. இதனால் அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில் சுமார் 2.2 கோடிக்கும் அதிகமான ஆப்கானியர்கள் பசியில் வாடி வருவதாக பொருளாதார வல்லுநர் அப்துல் நசீர் ரிஷ்டியா கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக இன்றளவிலும் ஆப்கானை விட்டு அந்நாட்டு குடிமக்கள் வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு வெளியேற முடியாதவர்கள் கடுமையான பஞ்சத்துக்கு ஆளாகி அவதியுற்று வருகிறார்கள்.

தங்களது குழந்தைகளுக்கு உணவளிக்கக் கூட முடியாத நிலையில் பெற்றோர்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தினசரி வாழ்க்கையை கடக்க பணம் ஈட்டுவதற்கும் கைவசம் தொழில் ஏதும் இல்லாததால் வேறு வழியின்றி மக்கள் தங்களது உடல் உறுப்புகளை விற்று காசாக்கி வருகிறார்கள்.

குறிப்பாக சிறுநீரகங்களை விற்கும் அவலம் ஆப்கானிஸ்தானில் அண்மை நாட்களாக தொடர்ந்து வருகிறது. அதன்படி நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள்.

ஒரு சிறுநீரகத்தை விற்றால் 70 ஆயிரம் ரூபாய் வரை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோக 5 வயதுக்கும் மேலான சிறார்களின் சிறுநீரகங்களையும் விற்கும் சூழலுக்கு ஆப்கானியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

banner

Related Stories

Related Stories