100 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்த முன்னாள் அமேசான் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேபிடல் ஒன் என்ற நிதி நிறுவனத்தின் 100 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஹேக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியாட்டிலைச் சேர்ந்த 33 வயதுடைய பைஜ் தாம்சன் என்ற பெண் அமெரிக்காவில் உள்ள 100 மில்லியன் மற்றும் கனடாவில் உள்ள 6 மில்லியன் கேப்பிடல் ஒன் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை ஹேக் செய்துள்ளார். ஆனால் அவர்களது கிரெடிட், டெபிட் கார்டுகளின் விவரங்களை ஹேக் செய்வதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பைஜ் தாம்சம் அமேசானின் இணைய பிரிவில் முன்பு பணிபுரிந்ததாகவும், தற்போது சியாட்டில் உள்ள வேரெஸ் கிடீஸ் என்ற சமூக வலைதள அமைப்பில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.