ஜமைக்கா நாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், காப்பாளர் ஒருவர் கூண்டிலிருந்த சிங்கத்திற்கு கம்பிகளுக்கு இடையே உணவு கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபர் இரும்பு கூண்டில் உள்ள துளைகள் வழியாகக் கையை விட்டு சிங்கத்தின் பல்லையும், அதன் பிடரியையும் பிடித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் இதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் திடீரென அந்த சிங்கம், காப்பாளரின் விரலைக் கடித்துத் துப்பியுள்ளது. இதைப்பார்த்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து பதறியடித்து ஓடினர்.
பின்னர் சிங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட காப்பாளர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு கொடுத்த காப்பாளரின் விரலை ஏன் சிங்கம் கடித்துத் துப்பியது என்பது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனால்தான் உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை தொட்டு விளையாடுவது ஆபத்தான ஒன்றே என்பதையே இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.