வைரல்

ட்விட்டரில் களம் இறங்கிய ‘ஒன்றிய உயிரினங்கள்’ : சமாளிக்க முடியாமல் திணறும் சங்கிகள்!

ஒன்றிய உயிரினங்கள் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி நெட்டிசன்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் களம் இறங்கிய ‘ஒன்றிய உயிரினங்கள்’ : சமாளிக்க முடியாமல் திணறும் சங்கிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தை தமிழ்நாடு என்றும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும் அழைக்கத் தொடங்கியிருப்பது பாஜக உள்ளிட்ட வலதுசாரியினரிடையே கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், இந்து மக்கள் கட்சியின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில் டைனோசர் கூட தமிழில்தான் பேசியிருந்ததாக சொல்லுவார்கள் போல இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து ட்விட்டரில் டைனோசர், சிங்கம், மாடு என தொடங்கி மண்புழு வரையில் விலங்கினங்கள் மற்றும் உயிரினங்களின் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் கொரோனோ தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என மக்களை உயிரினங்கள் அறிவுறுத்துவதும், தமிழ் மொழியை புறக்கணிப்போரையும் தமிழ்நாட்டையும் அதன் வரலாற்றை இகழ்வோரையும் விமர்சிக்கும் வகையிலும் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

மேலும் ட்விட்டரில் ஒன்றிய உயிரினங்கள் என்ற ஹேஷ்டேக்கும் கூடவே ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிடப்பட்டு வரும் பதிவுகள் அனைத்தும் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories