தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கக்கூடிய நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
அந்த வகையில் ஓட்டேரி நல்லா கால்வாய், அம்பேத்கர் பாலம், பேசின் பிரிட்ஜ், விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,
“எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்க கூடிய அளவிற்கு மாநகராட்சி அனைத்து நிலையிலும் தயாராக உள்ளது. இதுவரை மழை நீர் தேக்கம் எங்கும் சென்னையில் இல்லை, சிறிய அளவில் தேங்கிய நிறம் அகற்றப்பட்டு விட்டது, மழையில் ஒரு மரம் விழுந்தது அதுவும் அகற்றப்பட்டுவிட்டது.
சென்னை மாநகராட்சியில் 320 இடங்களில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இந்த மையத்தில் உணவு சுகாதார வசதிகள் குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தனை அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பொது மக்களுக்கு மழை நேரங்களில் உணவு வழங்க 120 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்களை மீட்டு நிவாரண மையத்தில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் சென்னை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கணேசபுரம் சுரங்கப்பாதையை தவிர்த்து சென்னையில் இருக்கக்கூடிய அத்தனை சுரங்க பாதைகளும் இயல்பாக போக்குவரத்து சென்று வருகிறது. 100 HP மோட்டார்கள் 134 தயார் நிலையில் உள்ளது, 426 மோட்டார் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளது.
மழை காலத்தை முன்னிட்டு சென்னையில் 2193 சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது, 1,19,828 பேர் பயனடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் 22 பேர் மழை வெள்ள மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.
இந்த 18,500 தன்னார்வலர்கள் மழையில் பணியாற்ற பதிவு செய்துள்ளார்கள், நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம் இனி மழை தான் வரவேண்டும். ஓட்டேரி நல்லான் கால்வாயில் ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது, மீதம் 10 டன் தன் முதல் 15 ஆயிரம் டன் வரை உள்ள மண்ணை அகற்ற வேண்டும், 10 கிலோமீட்டர் வரை மணலை அகற்ற வேண்டும், விருகம்பாக்கம் கால்வாயிலும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்ற அதிகாரிகள் மக்கள் பாதிக்க கூடாது என்ற வகையில் கண்ணும் கருத்துமாக உள்ளனர், மக்களுக்கு தேவையான அனைத்து முழு நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது. சென்னை முழுக்க கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.