தமிழ்நாடு

தீப ஒளி திருநாளுக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்!

தீப ஒளி திருநாள் அக்டோபர் 31ம் நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான பட்டாசு வெடிப்புகள் குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தீப ஒளி திருநாளுக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தீப ஒளி திருநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தீப ஒளி திருநாளுக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்!

குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

காலை 6மணி முதல் 7மணி வரையும், இரவு 7மணி முதல் 8மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் உள்ளிட்ட நெறிமுறைகளை வெளியிட்டு மாசு கட்டுபாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories