தமிழ்நாடு

”சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் நலனை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் நலனை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் நலனை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தொழிலாளர்களின் 14 கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் நலனை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியுடன் தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,“சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பிரச்சனையில் தொழிலாளர் நலனை பாதுகாப்பது மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வது ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பிரச்சனையில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஊதியத்தோடு ரூ.5000 ஊக்கத்தொகை, தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்து வசதிகள்,கூடுதலான விடுப்புகள்,

பணிக்காலத்தில் தொழிலாளர் இறந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.1 லட்சம் நிவாரணம், உணவு வசதி, மருத்துவ வசதி போன்றவை மேம்படுத்தப்படும் என தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று சாம்சங் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் நலனை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொடர் முயற்சியால், பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளும் வந்துள்ளது. இந்தியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவையாகும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories