தமிழ்நாடு

ரூ.1.60 கோடி மோசடி செய்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு : அதே கட்சி நிர்வாகி பரபரப்பு புகார்!

பண மோசடி செய்ததாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.60 கோடி மோசடி செய்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு : அதே கட்சி நிர்வாகி பரபரப்பு புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க இளைஞரணி செயலாளராக இருப்பவர் கிருஷ்ணன். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு மீது புகார் அளித்துள்ளார்.

அதில், மக்களவை தேர்தலில்ன் போது விழுப்புரம் தொகுதியில் போட்டியிட தனக்கு சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி தன்னிடம் குமரகுரு ரூ.1.60 கோடி பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் தனுக்கு சீட் வழங்காமல் வேறு ஒரு நபருக்கு வழங்கப்பட்டது.

இது குறித்து குமரகுருவிடம் கேட்ட போது, ”தேர்தலில் தோல்வியடைந்து உள்ளதால் பணத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.பிறகு மீண்டும் பணத்தை குமரகுருவின் இல்லத்திற்கு சென்று கேட்டபோது, தன்னை அவர் தாக்கினார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் தனியார் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை பெற்று வந்தேன். இது குறித்து கட்சி தலைமையிடம் புகார் அளித்தேன்.

இதையடுத்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் விசாரித்துள்ளார். அதன் பிறகும் குமரகுரு தனக்கு பணத்தை திருப்பி தரவில்லை. தற்போது, கட்சி தலைமையில் புகார் அளித்ததால் பணத்தை திருப்பி தர முடியாது மிரட்டுகிறார். இது குறித்து உரிய விசாரணை நடத்த குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories