தமிழ்நாடு

ரூ. 67.41 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!

ரூ. 67.41 கோடி மதிப்பீட்டிலான கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது.

ரூ. 67.41  கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 2 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.67.41 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருவாரூர், விஜயபுரம், அருள்மிகு ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலுடன் இணைந்த குழுக்கோயிலான அருள்மிகு ஐநூற்று பிள்ளையார் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 14.11 கோடி மதிப்பிலான 35,276 சதுரடி மனை ஆக்கிரமிப்பிலிருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், மற்றொரு குழுக்கோயிலான அருள்மிகு கபிலேஷ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.53.30 கோடி மதிப்பிலான 1,33,252 சதுரடி நஞ்சை நிலம் இரண்டு நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், நீர்பாசன வசதியில்லாத காரணத்தினால் சாகுபடி செய்யப்படாமல் தரிசாக இருந்தது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.67.41 கோடியாகும்.

banner

Related Stories

Related Stories