தமிழ்நாடு

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!

தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாநிலங்களவையில் ஒன்றிய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அப்போது அப்போது பேசிய அவர், ”நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக நடைபெறும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் எமது பரிந்துரைகளும் எதிர்வரும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் பரிசீலிக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

2021-22 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட உரையில், மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப்பணியை 63,246 கோடி ரூபாய் செலவில், ஒன்றிய அரசு திட்டமாக அறிவித்திருந்தார். 21.11.2020 அன்று சென்னையில் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சரால் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் 17.08.2021 அன்று திட்ட முதலீட்டு வாரியத்தால் (PIB) பரிந்துரைக்கப்பட்டிருப்பினும், பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழுவின் (CCEA) ஒப்புதலுக்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக, காத்திருக்கிறது. மேற்சொன்ன ஒப்புதல் நிலுவையிலுள்ள போதும், அதற்கான முழுச் செலவினமும் மாநிலத்தின் சொந்த நிதியிலிருந்து தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம், தமிழ்நாடு அரசிற்கு மாநில நிதியில் கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன், இத்திட்டத்தின் செயல்பாட்டின் வேகத்தையும் குறைத்துவிடுவது கவலைக்குரியது, எனவே முதலில் முன்மொழியப்பட்டபடியே இத்திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமெனவும், 2024-25 ஒன்றிய வரவு செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கான போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் ஒன்றிய அரசை நான் வலியுறுத்துகிறேன்.

சென்ற ஆண்டு அடுத்தடுத்து இரண்டு பெரும் இயற்கைப் பேரிடர்களை தமிழ்நாடு எதிர்கொள்ள நேரிட்டதால், மாநில அரசின் நிதிநிலைமை மிகமோசமாக பாதிக்கப்பட்டது, தமிழ்நாட்டில் நேரிட்ட இவ்விரு பேரிடர்கள் ஏற்படுத்திய பாதிப்பின் தாக்கத்தை விவரித்து விரிவான இரண்டு அறிக்கைகளை அளித்து, பேரிடர் நிவாரண நிதியாக 37,906 கோடி ரூபாயை மாநில அரசு கோரியிருந்த நிலையில், ஒன்றிய அரசு மிகக் குறைவாக 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்துள்ளது. பேரிடர்களின் அளவையும் உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் சேதத்தையும் கருத்தில் கொள்கையில், இந்த இழப்பீட்டுத்தொகை தேவையைவிட மிகக் குறைவானது மட்டுமின்றி இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்படும் நிதி என்பது, மாநிலங்களுக்குச் அளிக்க வேண்டிய உரிய நியாயமான தொகையாகும். எனவே பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு கூடுதலாக போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழக அரசுக்கு 3,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் ஈட்டிய வரி வருவாய் அளவினை புதிய வரி முறையில் எட்டப்படும் வரையில், மாநிலங்களுக்கு போதுமான அளவில் இழப்பீடு வழங்கப்படும் என்ற நியாயமான எதிர்பார்ப்பில் மட்டுமே மாநிலங்கள் தங்களது வரிவிதிக்கும் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டன. ஆனால், ஒன்றிய அரசு 30.06.2022 அன்று சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டினை நிறுத்தியதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் குறைவு ஏற்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பின்னர், பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் வேளையில், ஒன்றிய அரசு, பகிர்ந்தளிக்கக்கூடிய வரித்தொகுப்பிலிருந்து மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களைமாநிலங்கள் வருவாய்தனது வருவாய் வசூலை விதிப்பதன் வாயிலாக மாற்றி வருகிறது. இதனால், 2011-12 ஆம் ஆண்டில் 10.4% ஆக இருந்த மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் 2022- 23 ஆம் ஆண்டில் 20.28% ஆக மொத்த வரி வருவாயின் சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலங்களின் வரி பகிர்வில் தங்களின் நியாயமான பங்கைப் பெறும் வகையில் வரிவிதிப்புக்கான அடிப்படை வீதங்களில் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை இணைக்குமாறு ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேல் வரி மற்றும் மாநிலங்களுக்கான ஒன்றிய வரிகளின் பங்கானது, கூடுதல் கட்டணங்களை வரைமுறையின்றி அதிகரிப்பதின் மூலம் குறைந்து வருகிறது, அதே வேளையில் ஒன்றிய அரசின் நிதியுதவிடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதிச்சுமையை மாநில அரசுகளின் மீது ஒன்றிய அரசு படிப்படியாக சுமத்தி வருகிறது. பல்வேறு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் இன்றைய செலவினங்களின் அடிப்படையில் போதுமானதாக இல்லாததால், திட்டச் செலவினங்களில் பெரும்பகுதியை மாநில அரசுகள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உதாரணமாக,

• பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புரம்) வீட்டுவசதி' திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு வீடு ஒன்றிற்கு 1.5 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது, அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிற்கு 12-14 இலட்சம் ரூபாயை தனது பங்களிப்பாக வழங்குகிறது.

• பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின்(கிராமப்புறம்) கீழ், ஒன்றிய அரசு வீடு ஒன்றிற்கு 0.72 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கும் நிலையில் மாநில அரசு வீடு ஒன்றிற்கு 1.68 இலட்சம் ரூபாயை தன் பங்களிப்பாக வழங்கி வருகிறது.

•தேசிய சமூக நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 200 ரூபாய் மற்றும் ஒவ்வொரு விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கும் மாதம் 300 ரூபாய் மட்டுமே தனது பங்களிப்பாக வழங்குகிறது. இத்தொகை கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமானதாக இல்லாததால், மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடு மாநிலமும் இத்தொகையை உயர்த்தி, இவ்வகையைச் சேர்ந்த ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியமாக 1,200 ரூபாயை வழங்குகிறது.

எனவே, தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தனது பங்களிப்பு தொகையை அதிகரித்து, ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களில் குறைந்தபட்சம் 50% பங்களிப்பை வழங்க வேண்டுமென ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றக்கூடாது என ஒன்றிய அரசுக்கு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அதற்குப் பதிலாக ஒன்றிய அரசு கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை காப்பதற்காக, மாநில அரசுகளுடன் கூட்டாக இணைந்து, இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உதவ வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்கள் பெறும் நிகர கடன் உச்சவரம்பு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடாக ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்திற்கு கணக்கிடப்பட்ட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்படுவதால், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 8,500 கோடி ரூபாய் அளவில் கடன் பெறுவதில் குறைவு ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வரிகள் வாயிலாக நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கான மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட சூழ்நிலையில், செலவினங்களின் சுமை மாநிலங்களுக்கு மாற்றப்படும் போது, கடன் வாங்குவதில் விதிக்கப்படும் கட்டுப்பாடு மாநில நிதிநிர்வாகத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும். அடுத்து வரும் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதில் ஒன்றிய அரசு பொருத்தமான மாற்றங்களைச் செய்வது நியாயமானது என்று நான் நினைக்கிறேன். இந்தப் பரிந்துரையை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 0.5% கூடுதல் கடன் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, ஒவ்வொரு ஆண்டும் அதன் மின் பகிர்மான நிறுவனங்களின் (DISCOMS) இழப்புகளை வரையறுக்கப்பட்ட சதவீதத்தில் ஏற்றுக்கொள்ளுமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இத்தொகை வழங்கப்படவில்லையெனில், மாநிலங்களின் கடன் பெறும் உச்சவரம்பிலிருந்து ஒன்றிய அரசு அத்தொகையைக் கழித்துக்கொள்ளும். இந்த நிபந்தனையால், 2024-25ஆம் ஆண்டுவரையில், கூடுதல் கடன் தொகையாக ரூ.30,000 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு பெறும் நேர்வில், அதன் பகிர்மான நிறுவனங்களுக்கு ஏறத்தாழ 52,000 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. இந்த கட்டுப்படுத்தும் நிபந்தனையால், தமிழக அரசு, கூடுதலாக, 22,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த செலவினம், மாநிலங்களின் வளங்கள் மற்றும் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு நிதியளிக்கும் திறன் ஆகியவற்றில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. 2015 ஆம் ஆண்டின் உதய் (UDAY) திட்டத்தைப் போலவே, பகிர்மான நிறுவனங்களின் (DISCOMS) இழப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக, மாநிலத்தின் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் உச்சவரம்பு கண்கீட்டிலிருந்து விலக்களிக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

பெரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிறது. அடுத்தடுத்து வந்த ஒன்றிய வரவு-செலவு திட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான இரயில்வே திட்டங்களே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னையின் புறநகர் பகுதிகளில் பெருகிவரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அப்பகுதிகளில் இரயில்வே உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தொழிற் பகுதிகளில் புதிய இரயில்வே தடங்கள் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் வரவு-செலவு திட்டத்தில் தமிழ்நாட்டில் பின்வரும் இரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1). தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு இடையே 4-ஆவது இருப்புப்பாதை வழித்தடம்.

2). திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி - ஓசூர் புதிய இருப்புப்பாதை வழித்தடம்.

3). அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி (143.5 கி.மீ.)

4). மீஞ்சூர் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் - மதுராந்தகம் - சிங்கப்பெருமாள்கோயில்

5). சேலம் – ஓசூர் – பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் - எர்ணாகுளம் நீட்டிப்புகளுடன் கூடிய சென்னை - சேலம் - கோயம்புத்தூர் ஆகிய இடங்களை இணைக்கும் மித அதிவேக இரயில் வழித்தடம். (Semi-High Speed Railway Corridor).

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையேயான திட்டங்களை அதிக அளவில் அத்தகைய திட்டங்களில் ஒன்று தாம்பரம் (NH-32) உயர்மட்ட சாலை மற்றும் செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரையிலான உயர்மட்ட சாலை அமைப்பதாகும், இது முன்னுரிமையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

2005-ஆம் ஆண்டில் சென்னை - கன்னியாகுமரி வழித்தடத் திட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நான்கு வழி நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டது. தற்போது போக்குவரத்து வாகனங்கள் பன்மடங்கு அதிகரித்து, சாலை விபத்துகளால் கடுமையாக பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த வழித்தடத்தை விரிவாக்கும் புதிய திட்டத்திற்கு ஒன்றிய அரசு வரும் வரவு செலவு திட்டத்தில் போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பை அளித்தற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்வதுடன் அனைத்து மாநிலங்களின் கருத்துகளும் சாதமாக பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறேன்.

banner

Related Stories

Related Stories