தமிழ்நாடு

”திமுக இருக்கும் வரை பாஜகவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!

உச்சகட்ட தோல்வி பயத்தில் பிரதமர் மோடி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”திமுக இருக்கும் வரை பாஜகவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க வேட்பாளர் மலையரசன் மற்றும் சேலம் தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோரை ஆதிரித்து சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " நமது வெற்றிக்கு கட்டியம் கூறும் விதமாக இந்த பிரச்சார பொதுக்கூட்டம் அமைந்துள்ளது. உங்களை பார்க்கும் போது எனது கண்ணுக்கு வெற்றிதான் தெரிகிறது. திராவிட மாடல் அரசின் குரல் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் கேட்கிறது. ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நாம்தான் எடுத்துக்காட்டு. ஒன்றிய அரசு எப்படி செயல்பட கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு பா.ஜ.க அரசு.

இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை துளைத்துவிட்டனர். தோல்வி பயத்தால்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையை விட்டு கைது செய்துள்ளார் மோடி.

தமிழ்நாட்டை புண்ணிய பூமியாக மாற்றுவேன் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன?. வெள்ளத்தில் மக்கள் பாதித்தபோது ஏன்இந்த புண்ணிய பூமிக்கு நீங்கள் வரவில்லை. தமிழ்நாடு புண்ணிய பூமியாகத்தான் இருக்கிறது. எத்தனை தேர்தல் வந்தாலும் பா.ஜ.க வெற்றி பெறாது. என்றும் பா.ஜ.கவின் மண்ணாக தமிழ்நாடு ஒருபோதும் மாறாது. தி.மு.க இருக்கும் வரை ஒருபோதும் பா.ஜ.கவின் எண்ணம் ஈடேறாது.

காலையில் இந்தியை திணித்துவிட்டு மாலையில் தமிழ் மீது பாசம் காட்டுவது என்ன மாதிரியான பாசம்?. பிரதமர் மோடியைப் போல் ஆதாரம் இல்லாமல் நான் பேசமாட்டேன். ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்.பா.ஜ.கவில் 261 ரவுடிகள் உள்ளனர். இதற்கான பட்டியல் எனது கையில் உள்ளது. ரவுடிகளை வைத்துக் கொண்டு சட்டம், ஒழுங்கை பற்றி நீங்கள பேசலாமா?. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதைப் போல் அவதூறு பிரச்சாரம் செய்வது பிரதமர் பதவிக்கு அழகல்ல.

மோடி மாடல் இன்று அப்பலப்பட்டு நிற்கிறது. ஆனால் திராவிடமாடல் இன்று உயர்ந்து நிற்கிறது. திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை போல் ஒன்றிய அரசின் சாதனை திட்டங்களை மோடியால் பட்டியலிட முடியுமா?. நாட்டை காப்பதற்கான உங்கள் வாக்குகள் அமையவேண்டும். நாற்பதும் நமதே. நாடும் நமதே" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories