தமிழ்நாடு

“எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல் அனைத்தும் தெரியும்”: அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு புகார் - முழு விவரம்

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே ஒன்றிய செயலாளர் உள்பட நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக, பழனிசாமி மீதும் அவரது ஆதரவாளர் மீதும் குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல் அனைத்தும் தெரியும்”: அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு புகார் - முழு விவரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து இருப்பதாக ஆதாரத்தோடு குற்றச்சாட்டு கூறிய, சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜி நேற்று அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. கட்சியின் சட்ட திட்டங்களை தெரியாமல் கூட கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது.

கட்சியின் பொது செயலாளராக பதவியேற்க பொது குழு உறுப்பினரான நான் கையெழுத்து போட்டு உள்ளேன். பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமியை பணத்தோடு வரும் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே சந்திக்க முடிகிறது. ஆனால், தொண்டர்களை சந்திக்கவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டதற்கு தாம் இப்போது வெட்கப்படுகிறேன் என்று வேதனையோடு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி பால்பண்ணையில் தலைவராக இருந்த போது எவ்வளவு ஊழல் செய்து இருப்பதை வெளியில் சொல்லவா என்று கேள்வி எழுப்பிய அவர், பால் கடத்தல் செய்த்தது, நெய்யை கடத்தியது போன்ற ஊழலை செய்ததை சொல்லவா என்றும் அவர் தலைவராக இருந்த போது, தான் இயக்குனராக இருந்த தாகவும், எனவே அவர் செய்த ஊழல் அனைத்தும் தெரியும் என்றும் தெரிவித்தார்.

“எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல் அனைத்தும் தெரியும்”: அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு புகார் - முழு விவரம்

300 சதுர அடி சொத்து இருந்த சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடலசம் தற்போது பல நூறு கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து அதிமுகவை ஏமாற்றி வருவது தொடர்பாக பொது செயலாளரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக தான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நான் ராஜினாமா கடிதம் கொடுத்தும் இதுவரை அது கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது என்றும் இவர் பொது செயலாளராக இருப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.

மாநகர மாவட்ட செயலாளர் மீது 1000 கோடி சொத்து மதிப்பு இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை பார்த்தால், எடப்பாடி பழனிசாமிக்கு பினாமியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. அதிமுகவில் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை என்றும் தெரிவித்த அவர், மாநகர் மாவட்ட வெங்கடாசலம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்த்து வைத்து இருந்த சொத்து பட்டியலை வைத்து விரைவில் நீதிமன்றத்தை வழக்கு தொடர உள்ளதாகவும், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என்றும், வருமான வரித்துறையிடமும் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி தினேஷ் என்கிற முனியப்பன் மற்றும் சேலம் ஒன்றிய அதிமுக இணை செயலாளர் மாலதி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் வெங்கடலசம் ஆகியோர் மீது குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

அதிமுகவிற்காகவும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவாக இருந்த தங்களை போன்றவர்களுக்கு உரிய மரியாதை இல்லை என்றும் பெண்களுக்கு உரிய மரியாதை இல்லை, பெண்களை தவறாக சித்தரிக்கும் சூழல் நிலவுகிறது என்றும் அதிமுக தவறான வழியில் செல்கிறது என்றும், குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு, எடப்பாடி பழனிசாமி மீதும் வெங்கடலசம் மீதும் குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜி மீண்டும் கூறும் போது கூவத்தூரில் நடிகைகளை அழைத்து கூத்தாடியது எல்லாம் தனக்கு தெரியும் என்றும், இதற்கு எல்லாம் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், தற்போது அதிமுகவில் சேர்ந்து உள்ள நடிகைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

banner

Related Stories

Related Stories