தமிழ்நாடு

”மீண்டும் மீண்டும் கிறுக்குத்தனமாக நடக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!

தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பிரச்சனையாகவே மாறிவிட்டார் என கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

”மீண்டும் மீண்டும் கிறுக்குத்தனமாக நடக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர் ஒரு பிரச்சனையாகவே மாறிவிட்டார். ஒரு ஆளுநர் இந்த அளவிற்குப் பிரச்சனை கொடுத்த வரலாறு தமிழ்நாட்டில் இதற்கு முன் இருந்தது இல்லை.

நாங்கள் கேள்வி கேட்ட பிறகு ஏன் இன்றைக்குக் கோப்புகளைத் திருப்பி அனுப்பினீர்கள் ? என்று உச்சநீதிமன்றமே ஆளுநருக்கு ஒரு கொட்டு கொட்டி இருக்கிறது. ஆளுநருக்கு இது தேவையா? ஒன்றிய உள்துறை அமைச்சகம் எங்களுக்குக் கால அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் மண்டியிட்டுச் சொல்லி உள்ளது.

”மீண்டும் மீண்டும் கிறுக்குத்தனமாக நடக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!

தமிழ்நாட்டு ஆளுநர் மீண்டும் மீண்டும் கிறுக்குத்தனமாக நடந்து கொள்வதைக் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. விடுதலை போராட்ட வீரர் சங்கரையாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்காமல் ஆளுநர் மறுத்தது ஒரு இழிவான நாகரிகம் அற்ற செயல். இதற்காக அவர் தலைகுனிய வேண்டும்.

அ.தி.மு.க, பா.ஜ.க பிளவு ஒரு கற்பனையானது. அவர்கள் முடிவு செய்து நடத்தக்கூடிய ஒரு நாடகம். எந்த வகையில் கருத்து வேறுபாடு உள்ளது என்று அ.தி.மு.க காரணம் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் எதுவும் சொல்லாமல் நேற்று வரை கூட்டணியிலிருந்த நாங்கள் இன்று பிரிந்துள்ளோம் என்று கூறுவது ஒரு நாடகமான செயல். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories