தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட NEET, JEE பயிற்சி வகுப்பால் எந்த பயனும் இல்லை : உண்மையை சொன்ன CAG அறிக்கை!

அதிமுக ஆட்சியில் NEET, JEE ஆகிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என சிஏசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட NEET, JEE பயிற்சி வகுப்பால் எந்த பயனும் இல்லை : உண்மையை சொன்ன CAG அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சியில் NEET,JEE ஆகிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதில் ரூ.4.27 கோடி செலவினத்தைத் தவிர்த்திருக்கலாம் என சிஏஜி அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியின் போது 2018 ஆம் ஆண்டு 52 நாட்கள் நீட் தேர்வுக்குத் தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 54,066. நீட் தேர்வில் கலந்து கொண்டவர்கள் 9,184. ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்தவர்களில் 17% மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 8 மட்டுமே. அதேபோல் 2019ம் ஆண்டும் ஒரே ஒரு மாணவர் மட்டுமே மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் JEE பயிற்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் துறையால் பராமரிக்கப்படவில்லை என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, கொரோனா காலத்தில் அரசு கல்லூரிகளில் நடந்த இணைய வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்வதற்காக அதிமுக அரசு மாணவர்களுக்கு டேட்டா சிம் கார்டு இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட NEET, JEE பயிற்சி வகுப்பால் எந்த பயனும் இல்லை : உண்மையை சொன்ன CAG அறிக்கை!

இந்த திட்டத்திற்காக அ.தி.மு.க ஆட்சியில் 9.69 லட்சம் டேட்டா சிம் கார்டுகளை கொள்முதல் செய்வதற்காக பி எஸ் என் எல், ரிலையன்ஸ், ஜியோ மற்றும் வோடபோன் ஆகிய நான்கு நெட்வொர்க் சேவைகளை வழங்குதல் மூலம் எல்காட் ஆணையை வழங்கியது.

அ.தி.மு.க ஆட்சியில் மார்ச் 2021 ஆண்டு 9.69 லட்சம் டேட்டா சிம் கார்டில் 1 லட்சத்து 846 சிம் கார்ட் மாணவர்களுக்கு விநியோகிக்காமல் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 3.46 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது கடந்த அ.தி.மு.க அரசு என குற்றம்சாட்டியுள்ளது சிஏஜி அறிக்கை.

banner

Related Stories

Related Stories