ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வை தடுக்க ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன எனநாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம் பின்வருமாறு:
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரண மக்களவையில் தயாநிதி மாறன் கேள்விமாக சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் இருந்து இந்திய நுகர்வோர்களை காப்பதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார்.
ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து இந்திய எரிபொருள் சந்தையை பாதுகாக்க ஒன்றிய அரசு எடுத்த அல்லது எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார். உலகளாவிய சூழ்நிலை காரணமாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலையினை குறைப்பதற்கோ அல்லதுஇந்திய நுகர்வோர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுஏதேனும் திட்டம் வகுத்துள்ளதா எனவும் எனில்அது குறித்த விவரங்களை தெரியப்படுத்தவும்.
இவ்வாறு தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.