தமிழ்நாடு

அதிக இனிப்பு உட்கொள்வதால் கால்நடைகளுக்கு ஆபத்து.. மாட்டுப் பொங்கல் குறித்து மருத்துவர் எச்சரிக்கை தகவல்?

அதிக இனிப்பு கலந்த பொங்கலைச் சாப்பிடுவதால் கால்நடைகளின் உயிர்களுக்கு ஆபத்து உள்ளது என கால்நடை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிக இனிப்பு உட்கொள்வதால் கால்நடைகளுக்கு ஆபத்து.. மாட்டுப் பொங்கல் குறித்து மருத்துவர் எச்சரிக்கை தகவல்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொங்கல் பண்டிகைகளில், மாட்டுப் பொங்கலை வெகு விமர்சையாக விவசாயிகள் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் தங்கள் வீடுகளில் இருக்கும் மாடுகளுக்கு என்று வடை, பொங்கல் என தயாரித்து, அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மகிழ்ச்சியா மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவார்கள்

பின்னர், படையலிட்ட உணவுகளை, மாட்டிற்குக் கொடுத்து மகிழ்வார்கள். இப்படி இனிப்பு கலந்த பொங்கல் மற்றும் சில உணவு பண்டங்களை மாடு உட்கொள்வதால் அடுத்தநாள் அவைகளுக்கு ரூமினல் அமிலத்தன்மை என்ற நோயால் பாதிக்கப்படுவதாகக் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பேராசிரியர் பி.செல்வராஜ் கூறுகையில், மாட்டுப் பொங்கல் முடிந்து அடுத்தநாள் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 20க்கும் மேற்பட்ட மாடுகள், காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருகின்றனர்.

அப்போது அவற்றைப் பரிசோதிக்கும் போது SARA – Subacute Ruminal Acidosis என்ற நோய்ல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. இவற்றிற்கு உரியச் சிகிச்சை அளிக்க வில்லை என்றால் மாடுகள் உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.

கால்நடைகளுக்கு அதிகப்படியான சர்க்கரை கலந்த உணவுகளைக் கொடுப்பதால் தான் இவைகள் இந்த நோய்களால் பாதிக்கப்படுகிறது. இதற்குச் சிகிச்சையாக அகத்தி கீரை நாங்கள் கொடுக்கிறோம்.

அதிக இனிப்பு உட்கொள்வதால் கால்நடைகளுக்கு ஆபத்து.. மாட்டுப் பொங்கல் குறித்து மருத்துவர் எச்சரிக்கை தகவல்?

மேலும் ஒரு விலங்கு சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டால், கால்நடை மருத்துவர்கள் ருமென் திரவத்தைச் சேகரித்து அதன் நுண்ணுயிர் நிலையைப் பரிசோதிப்பார்கள். பசுவின் வயிற்றின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.

ஆனால், விலங்கு மீட்க நாட்கள் எடுக்கும்; மீட்பு காலத்தில், பால் விளைச்சல் வெகுவாகக் குறையும். ஆனால் மாட்டுப்பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் தான் இப்படியான நிகழ்வுகள் அதிகம் நடைபெறுகிறது.

கால்நடைகளுக்குக் குறைந்த அளவு இனிப்புகளைக் கொடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனையிலிருந்து அவைகள் முற்றிலுமாக தப்பிக்க முடியும். வைக்போல் அல்லது பசுந்தீவினம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories