தமிழ்நாடு

மழையால் சேறும் சகதியுமான சாலை.. களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து போலிஸ்: குவியும் பாராட்டு!

சேறும் சகதியுமாக இருந்த சாலையைச் சீரமைத்த போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மழையால் சேறும் சகதியுமான சாலை.. களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து போலிஸ்: குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் கோவையில் பெய்த கனமழையால் ஆத்துப்பாலம் சாலை சிதிலமடைந்து சேறும் சகதியுமானது. இந்த சாலை முக்கிய பிரதான சாலை என்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

இதனை அறிந்த கோவை மாநகர போக்குவரத்து போலிஸார் விரைந்து வந்து குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியாக இருந்த சாலையை மண்வெட்டி கொண்டு சமன்படுத்தினர்.

போக்குவரத்து போலிஸாரின் இந்த நடவடிக்கைப் பார்த்து அப்பகுதி மக்கள் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். மேலும் விரைந்து சாலையைச் சமன்படுத்திய போலிஸாருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories