தமிழ்நாடு

திருப்பெரும்புதூர் என்கவுன்டர் எதிரொலி: வீடு வீடாக அதிரடி வேட்டை; சிக்கப்போகும் வட மாநிலத்தவர்கள்!

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பெரும்புதூர் என்கவுன்டர் எதிரொலி: வீடு வீடாக அதிரடி வேட்டை; சிக்கப்போகும் வட மாநிலத்தவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டாஸ்மாக் ஊழியர் படுகொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி 6 தனிப்படை அமைத்து திருப்பெரும்புதூர் முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 4ஆம் தேதி மர்ம நபர்கள் தாக்கியதில் சேல்ஸ்மேன் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு சேல்ஸ்மேன் ராம் பலத்த காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தாக்குதல் குறித்து எந்தவித அடையாளங்களும் இல்லாததால் காவல்துறையினர் கொலையாளிகள் இவர்களை கத்தியால் தாக்கி இருக்கக்கூடும் என்று கூறிய நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமுக்கு நுரையீரல் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் வலி இருப்பதாக கூறியதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது ராமுவின் நுரையீரல் பகுதியில் துப்பாக்கி தோட்டா இருப்பது தெரியவந்தது.

இதனால் கொலையாளிகள் துளசிதாஸ் மற்றும் ராம் இருவரையும் துப்பாக்கியால் தாக்கியுள்ளது உறுதியானது. இந்நிலையில் காவல்துறைக்கு சவாலாக இருந்த இந்த சூழலில் திடீரென திருப்பெரும்புதூர் சுங்க சாவடி அருகே துப்பாக்கி முனையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு வடமாநில வாலிபர்கள் இரண்டு நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கிய குற்றவாளியான முர்துஜா சுட்டு படுகொலை செய்தும் மற்றொரு கொள்ளையன் நைம்அக்தரை கைது செய்தும் போலீசார் பிடித்தனர்.

இந்நிலையில் இவர்கள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட நிலையில் ஒரகடம் டாஸ்மாக் கொலைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதனால் மீண்டும் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி 6 தனிப்படைகள் அமைத்து திருப்பெரும்புதூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories