தமிழ்நாடு

“115 சமூகங்களின் இட ஒதுக்கீடு உரிமையை பறித்த அ.தி.மு.க அரசு” : எடப்பாடி உருவப்படத்தை எரித்து போராட்டம் !

கரூரில் தடையை மீறி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து சீர்மரபினர் அமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“115 சமூகங்களின் இட ஒதுக்கீடு உரிமையை பறித்த அ.தி.மு.க அரசு” : எடப்பாடி உருவப்படத்தை எரித்து போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமூக நீதிப் போராளி நெல்சன் மண்டேலா தினத்தையொட்டி அநீதி எதிர்ப்பு நாளாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கரூர் மாவட்ட சீர்மரபினர் நல சங்கம் மற்றும் 115 சமுதாய கட்சிகள் கூட்டமைப்பு தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில், கரூர் ராயனூர் பேருந்து நிலையம் அருகே, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட 115 சமூகங்களின் இட ஒதுக்கீடு உரிமையை பறித்துள்ளாதாக முழக்கம் எழுப்பினர்.

மேலும் பாரபட்சமாக நடந்து கொண்ட அவரின் செயல்பாட்டை கண்டித்து எடப்பாடி பழனிசாமியின் உருவபடத்தையும் எரிக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்த தாந்தோன்றிமலை காவல் நிலையப் போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தடையை மீறி ராயனுாா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளில் முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி உருவப்படத்தை எரித்து சீர் மரபினர் அமைப்பு நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

banner

Related Stories

Related Stories