திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் L&T நிறுவனத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் தாயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு சிகிச்சை மையத்தையும் நாசர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவே கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் வேளையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற 25 நாட்களிலேயே தனது சிறிய முயற்சியாலும், உள் கட்டமைப்பை உருவாக்கியாதாலும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தவர் என்றும், தமிழக மக்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுதும் உள்ள தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் மு.க.ஸ்டாலின் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா,சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன்,துரை சந்திரசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும்,மருத்துவதுறையினரும் கலந்து கொண்டனர்.