தமிழ்நாடு

“ஆவின் வருமானத்தில் இழப்பு ஏற்படுத்தியிருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை உறுதி”: அமைச்சர் சா.மு.நாசர்!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாலகங்களில் அமைச்சர் சா.மு.நார் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

“ஆவின் வருமானத்தில் இழப்பு ஏற்படுத்தியிருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை உறுதி”:  அமைச்சர் சா.மு.நாசர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று இரவு தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் வருகை தந்திருந்தார். இதையடுத்து இன்று அதிகாலையில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள பாலகங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக, தமிழக அரசு ஆவின் பாலுக்கான விலையை சமீபத்தில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், குறைக்கப்பட்ட விலை பால் விற்பனை நடைபெறுகிறதா என்பதை அமைச்சர் ஆய்வு செய்தார்.

மேலும், வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்குப் பால் என்ன விலைக்கு வழங்கப்படுகிறது என்பதைக் கேட்டறிந்த தோடு பாலகங்களில் விற்பனையாகும் பாலின் அளவு உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நாகர்கோவில் ஆவின் பால் பண்ணையில் நடைபெறும் பால் வினியோகப் பணிகள் பதப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்ட தோடு கொள்முதல் மற்றும் விற்பனை விபரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர், “கொரோனா சங்கிலித் தொடரை அறுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் அரும் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்குப் பால் உற்பத்தி 36 லட்சம் லிட்டரிலிருந்து 39 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. முதல்வரின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறேன். அதேபோல், அதிக விலைக்குப் பாலை விற்றதாக 11 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே பாலை அதிக விலைக்கு விற்றால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவின் பால் பண்ணையில் வருமான இழப்பு, அதிகாரிகள் ஏற்படுத்தி இருந்தால் கண்டிப்பாகப் பழைய ஆவணங்களை ஆய்வு செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories