தமிழ்நாடு

‘சிறு சேமிப்புகளுக்கான தண்டத்தொகையை ரத்து செய்ய வேண்டும்’ - மோடி அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

கொரோனாவால் மக்கள் படும் துயரங்களை உணர்ந்து அஞ்சல் அலுவலக சிறு சேமிப்புகளுக்கான தண்டத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘சிறு சேமிப்புகளுக்கான தண்டத்தொகையை ரத்து செய்ய வேண்டும்’ - மோடி அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகளுக்கான தண்டத் தொகை ரத்து செய்து, கால தவணை கெடு நீட்டிப்பு கோரி மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-

அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள் - Recurring Deposits (RD), Public Provident Fund (PPF), Suhanya Samriddhi Yojana (SSA) - தவணைகளுக்கு காலக் கெடு உண்டு. அதற்குள் கட்டத் தவறினால் தண்டத் தொகை உண்டு. காலாவதியாகி விடும். அதைப் புதுப்பிப்பதற்கு கட்டணம் உண்டு. இதில் சுகன்யா திட்டம் பெண் குழந்தைகளுக்கானது.

கடந்த ஆண்டு நிதியமைச்சகம் இச்சேமிப்புகளின் தவணையைச் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு தந்தது. தண்டத் தொகையை ரத்து செய்தது. புதுப்பித்தல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்தது.

இந்த ஆண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தேசத்தின் பல பகுதிகள் கோவிட் பெரும் தொற்றின் இரண்டாம் அலை பரவலால் ஊரடங்கில் உள்ளன. ஆகவே கடந்த ஆண்டு எடுத்த அதே முடிவை எடுத்து சிறு சேமிப்புகளுக்கான தவணைக் கெடு நீட்டிப்பு, தண்டத் தொகை ரத்து, புதுப்பித்தல் கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு ஏழை நடுத்தர மக்களின் பாடுகளை உணர்ந்து முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories