தமிழ்நாடு

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் : ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க அரசை வெளுத்துவாங்கிய சு.வெங்கசேடன்!

“தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி மக்களின் வரிப்பணம் சூறையாடப்படும் வாசல் கதவாக உள்ளது” என மதுரை எம்.பி சு.வெங்கசேடன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் : ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க அரசை வெளுத்துவாங்கிய சு.வெங்கசேடன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணியை மோடி அரசு கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 நகரங்கள் இதற்குத் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன.

இதில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மட்டும்தான் ஆரம்பகட்ட அளவை எட்டியுள்ளது. பல இடங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்கிற பெயரில் ஏதோ சில புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிடுகின்றனர்.

மேலும் பல இடங்களில் அ.தி.மு.க பிரமுகர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக டெண்டர்களை விடுவதாகவும் இதில் முறையாக பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் : ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க அரசை வெளுத்துவாங்கிய சு.வெங்கசேடன்!

இதே நிலைதான் மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளும் நடைபெறுவதாகவும், இந்தப் பணியில் பிற மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் தனிச்சையாகவே ஆளும் அரசு செயல்படுவதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக, மதுரை மாநகரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில், பெரியார் பேருந்து நிலையம் சீரமைப்பு பணி, மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணி, வைகை ஆற்றுக்கரையில் பூங்கா, அடுக்குமாடி வாகன காப்பகம் உள்பட 13 பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுவில், குழுவின் தலைவராக மதுரை மாவட்ட ஆட்சியரும், இணை தலைவராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் நியமிக்கப்பட்டனர்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் : ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க அரசை வெளுத்துவாங்கிய சு.வெங்கசேடன்!

இந்த கூட்டத்தை அடிக்கடி கூட்டி, ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அ.தி.மு.க அரசு கொரோனாவைக் காரணம் காட்டி ஒருமுறைகூட கூட்டத்தைக் கூட்டவில்லை. இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பல முறை கூட்டம் நடத்தக் கோரியும் மாவட்ட நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டவில்லை எனத் தெரிகிறது.

இதனால் சு.வெங்கடேசன் எம்.பியே ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து இந்த கூட்டத்தை கூட்டுவதற்கு குழுவின் தலைவரான மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி நேற்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மதுரை கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி. மூர்த்தி, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் : ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க அரசை வெளுத்துவாங்கிய சு.வெங்கசேடன்!

அந்தக் கூட்டத்தில் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., “ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு மக்களின் பங்கேற்பு அவசியம். அதேவேளையில், மக்களுக்குப் பாதிப்பில்லாமல் பணிகளை முடிக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் எப்படி நடைபெறுகிறது? தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பணிகளுக்கு பத்து சி.இ.ஓ-க்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை இரண்டு சி.இ.ஓ-க்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களுக்கு சி.இ.ஓ-க்கள் நியமிக்கப்படவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் இந்தப் பணிகளில் நிர்வாகப் பலகீனம், கோளாறு என நிறைந்து காணப்படுகிறது. இது தமிழக அரசின் மிகப்பெரிய தோல்வியாகும்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் : ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க அரசை வெளுத்துவாங்கிய சு.வெங்கசேடன்!

அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி மக்களின் வரிப்பணம் சூறையாடப்படும் வாசல் கதவாக உள்ளது. மேலும், மதுரையில் மட்டும் இதுவரை 14 முறை ஸ்மார்ட் சிட்டி கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை கூட்டப்படவில்லை.

கடந்த மாதம் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் முடிவுகளின் படி ஆலோசனைக் கூட்டம் நடைபெற வேண்டுமெனக் கூறப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டமும் கூட்டப்படவில்லை. பல கடிதங்கள் எழுதிய பிறகு தற்போது கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எந்த வரைமுறையும் இல்லாமல் திட்டங்களை ஆரம்பித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காததால் மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.

சரியான தலைமைப் பொறுப்பு இல்லாததால் ஒரு பணி மட்டுமே முடிந்திருக்கிறது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்ட மூன்று முதல் நான்கு சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்மறையாக உள்ளது. இதில் ஒரு பங்கு குறைக்கப்பட வேண்டும்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் : ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க அரசை வெளுத்துவாங்கிய சு.வெங்கசேடன்!

அதேபோல், எல்.இ.டி பல்புகள் பொருத்துவதற்கு மட்டும் ரூ.24 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய முறையான விசாரணை தேவை. திட்டப்பணிக்கென ஒதுக்கப்பட்ட நிதியை சேமித்தால் அவற்றை அரசுப்பள்ளி, மாநகராட்சிப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்” என்றும் கூறினார்.

இந்தக் கூட்டம் மதியம் 2 மணி வரை நடைபெற்றதால், 11 மணிக்கு செல்லூர் ராஜூவின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்த ஆட்சியரும், ஆணையரும் அங்கிருந்து நகர முடியாததால் அமைச்சர் கூட்டத்திற்கு செல்லமுடியாமல் போனது.

இதனால், நீண்ட நேரம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories