புதிதாக 64 ஆயிரத்து 213 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1819 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 502 பேருக்கும், கோவையில் 171 பேருக்கும், செங்கல்பட்டில் 123 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 8,668 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7.58 லட்சத்து 191 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 478 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதில் மேலும் 2,520 பேர் குணமடைந்ததை அடுத்து மொத்தமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7.30 லட்சத்து 272 ஆக உள்ளது. ஆகவே தற்போது 16 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.