தமிழ்நாடு

“ஆகஸ்ட் 5 வரை தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்படும்” - தி.மு.க தொடுத்த ரிட் மனுவில் மத்திய அரசு தகவல்!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 58 விமானங்கள இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்.

“ஆகஸ்ட் 5 வரை தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்படும்” - தி.மு.க தொடுத்த ரிட் மனுவில் மத்திய அரசு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் தாயகம் மீட்டுவரக்கோரி தி.மு.க சார்பில் கழக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நீதிப் பேராணை (ரிட் மனு) மீதான இன்றைய விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் 20.7.2020 முதல் 05.08.2020 வரை தமிழகத்திற்கு இயக்கப்படவுள்ள விமானச் சேவைகள் குறித்த அட்டவணையைச் சமர்ப்பித்தார்.

அதில், சென்னைக்கு 41, திருச்சிக்கு 11, கோயம்புத்தூருக்கு 4, மதுரைக்கு 2 என தமிழகத்துக்கு மொத்தம் 58 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வந்த மூன்று விமானங்கள் காலியாக சென்னையில் தரையிறங்கியதாக கடந்த இரு நாட்களுக்கு முன்பாக இந்து நாளேட்டில் வெளியான செய்தி குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, தி.மு.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பயண முகவர்கள் ஒட்டுமொத்தமாக பயணச்சீட்டினை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பதாகவும், அதனால் மற்றவர்களால் பயணச்சீட்டுகளை வாங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

“ஆகஸ்ட் 5 வரை தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்படும்” - தி.மு.க தொடுத்த ரிட் மனுவில் மத்திய அரசு தகவல்!

பயண முகவர்கள் ஏன் நஷ்டமடையும் வகையில் பயணச்சீட்டுகளை விற்பனை செய்கிறார்கள் என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நீதிமன்றத்தின் தலையீட்டால்தான் 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் அதிக விமானங்கள் இயக்கப்பட்டு, வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் பயணிகள் மீட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதோடு, கடந்த 4.7.2020 அன்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி, 25,939 பயணிகளை மீட்க இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 149 விமானங்களில் 58 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மீதமுள்ள விமானங்கள் இயக்கப்படுவதற்கான அட்டவணையை வரும் 30.07.2020 அன்று தாக்கல் செய்வதாகக் கூறியதையடுத்து, இவ்வழக்கினை 30.07.2020 அன்று விசாரணைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories