தமிழ்நாடு

தபால்துறை தேர்வில் தமிழ் மொழி இல்லாததால் தேர்வர்கள் கடும் அதிர்ப்தி!

அஞ்சலக தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழி மட்டும் உள்ளதால் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தபால்துறை தேர்வில் தமிழ் மொழி இல்லாததால் தேர்வர்கள் கடும் அதிர்ப்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தபால்துறையில் அஞ்சலர் உள்ளிட்ட 4 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நாடுமுழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. இதில், இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மட்டும் தேர்வெழுதுவதற்கு தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுவரை தபால்துறை காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 தேர்வு மையங்களில் 1200 பேர் தபால்துறை தேர்வை எழுதுகின்றனர். காலை, மதியம் என இரண்டு தாள் கொண்ட தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

தபால்துறை தேர்வில் தமிழ் மொழி இல்லாததால் தேர்வர்கள் கடும் அதிர்ப்தி!

வினாத்தாள்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளதால் தேர்வர்கள் கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், தபால்துறை தேர்வில் தமிழ் மொழி இடம்பெறக் கோரி நேற்று சமூக ஆர்வலர் ஹென்றி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிட்டிருந்தார். அதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், வினாத்தாளில் இந்தி, ஆங்கில மொழிகளுக்கு விலக்கு அளிக்க முடியாது எனக் கூறி தேர்வு முடிவுகளை ஜூலை 22ம் தேதி வரை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டு வழக்க ஒத்திவைத்தது.

இந்தியை திணிப்பதற்காக சமீபத்தில் புதிய கல்விக்கொள்கை என்ற அறிவிப்பை வெளியிட்டு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அதனை மாற்றியமைத்தது பா.ஜ.க. ஆனால், அரசு தேர்வுகளின் மூலம் இந்தியை புகுத்துவதை திட்டமாக கொண்டு மோடி அரசு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories