தமிழ்நாடு

மனிதகழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?-ப.சிதம்பரம்

மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனிதகழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?-ப.சிதம்பரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் நேற்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மனித கழிவுகளை அகற்றும் பணிகளின்போது இறந்தவர்களின் எண்னிக்கையைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது :

தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் 144. உயிரிழந்த 144 மனிதர்கள் எந்த சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்கள்.

மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளின்போது உயரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது. மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories