விளையாட்டு

2 வருடத்தில் அரைசதம் கூட அடிக்காத சோகம்... பாபர் அசாமை அணியில் இருந்து நீக்கிய பாகிஸ்தான்... காரணம் என்ன?

2 வருடத்தில் அரைசதம் கூட அடிக்காத சோகம்... பாபர் அசாமை அணியில் இருந்து நீக்கிய பாகிஸ்தான்... காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தும் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.

2 வருடத்தில் அரைசதம் கூட அடிக்காத சோகம்... பாபர் அசாமை அணியில் இருந்து நீக்கிய பாகிஸ்தான்... காரணம் என்ன?

இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், 2 மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு அரைசதம் கூட எடுக்காததாலே பாபர் அசாம் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஒரு காலத்தில் விராட் கோலிக்கு நிகரானவர் பல்வேறு முன்னாள் வீரர்களால் கூறப்பட்ட பாபர் அசாம் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில், பாபர் அசாம் அணியிலிருந்து நீக்கப்படவில்லை, அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories