விளையாட்டு

பிரமாண்டமாக நிறைவடைந்த சென்னை Formula 4 கார் பந்தயம் : வெற்றியாளர்கள் விவரம் !

பிரமாண்டமாக நிறைவடைந்த சென்னை Formula 4 கார் பந்தயம் : வெற்றியாளர்கள் விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை தீவுத்திடலில் இரவு நேர பார்முலா போர் ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது நாளான நேற்று ஃபார்முலா 4 இந்தியன் ரேஸ், இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஜேகே எஃப்எல் ஜிபி 4 என மூன்று வகை போட்டிகளில் பிரதான சுற்று போட்டி மாலையில் தொடங்கியது.

ஜேகே எஃப்எல் ஜிபி 4 பிரிவில் முதல் ரேஸில் டில்ஜித் என்ற டார்க் டான் அணியை சேர்ந்த வீரர் முதல் இடத்தை பிடித்தார். மொத்தம் எட்டு லேப்ஸ்களை கடப்பதற்கான இந்த போட்டியில் பாதியிலேயே விபத்தின் காரணமாக பந்தயம் நிறுத்தப்பட்ட சூழலில் கடைசிவரை முன்னிலையில் இருந்த டார்க் டான் அணியை சேர்ந்த டில்ஜித் முதலிடத்தில் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் முதல் ரேசில் ஹய்முன் முதலிடத்தை பிடித்தார். கோவா அணியை சேர்ந்த அவரும் அதே கோவா அணியை சேர்ந்த மற்றொரு வீராங்கனை கேப்ரியல் ஜெய்கோவாவும் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

இந்தியன் ரேசிங் லீக் இரண்டாவது ரேஸில் போர்ச்சுகல் நாட்டை சார்ந்த டெல்லி அணி வீரர் ஆல்வெரோ முதலிடைத்தை பெற்றனர். இரண்டாவது இடத்தை கோவா அணியை சார்ந்த இந்திய வீர சுனில் ஷாவும், மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணியை சார்ந்த இந்திய வீரர் ரிஷான் ராஜுவும் பிடித்தனர்.

ஃபார்முலா 4 இந்தியன் ரேஸில் முதல் பந்தயத்தில் ஆஸ்திரேலியாவை சார்ந்த கொச்சி வீரர் பார்டர் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை இந்தியாவை சேர்ந்த பெங்கால் வீதத் ருஹான் அல்வா, இந்தியாவை சார்ந்த பெங்களூர் அணி வீரர் அபை மோஹன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து போட்டிகளுக்கு இடையே தமிழ்நாடு மகளிர் பைக் அணியின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எஃப்4 இந்தியன் ரேஸ் 2-வை நேரில் கண்டு ரசித்தார்.

பிரமாண்டமாக நிறைவடைந்த சென்னை Formula 4 கார் பந்தயம் : வெற்றியாளர்கள் விவரம் !

தொடர்ந்து ஃபார்முலா இந்தியன் ரேஸில் இரண்டாவது பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், நடிகருமான நாக சைதன்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹைதராபாத் அணியின் அலிபாய் முதலிடத்தையும், அகமதாபார் அணியின் திவி நந்தன் இரண்டாவது இடத்தையும், ஜேடன் பாரியர்ட் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

இதனிடையே இரவு நேர கார்பந்தயப் போட்டியை காண்பதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான கங்குலி, ஹைதராபாத் அணியின் உரிமையாளர் நாக சைதன்யா, தவிர ஜான் ஆபிரகாம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து போட்டியை கண்டு ரசித்தனர்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியை சேர்ந்த 100 மாணவர்கள் இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். பல்வேறு சாகச நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் இரவு நேர கார்பந்தயம் கலைக்கட்டுவது பொதுமக்கள் மத்தியில் மிகவும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இரவு நேர ஸ்வீட் சர்க்யூட்டில் வீரர்களின் கார்கள் சீறி பாய்ந்து செல்லும் காட்சிகள் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைத்தது.

banner

Related Stories

Related Stories