விளையாட்டு

கிரிக்கெட்டை அழிக்கும் IPL அதிரடி : ஒரே ஆண்டில் மாறிய டி20 கிரிக்கெட்டின் முகம் : ஒரு பகுப்பாய்வு !

கிரிக்கெட்டை அழிக்கும் IPL அதிரடி : ஒரே ஆண்டில் மாறிய டி20 கிரிக்கெட்டின் முகம் : ஒரு பகுப்பாய்வு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாள் கணக்கே இல்லாமல் விக்கெட் முடியும் ஆடிய டெஸ்ட் போட்டிகள்தான் கிரிக்கெட்டின் தொடக்கம். அதிலிருந்து 5 நாள் போட்டிகளாக கிரிக்கெட் பரிமாணம் அடைந்து, அதன்பின்னர் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களாக கிரிக்கெட் போட்டிகள் மாறியது.

அந்த வகையில் 40 ஓவர் கொண்ட போட்டிகளாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஜனவரி 5, 1971-ம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த நாள்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அச்சாரம் போட்ட நாள் என்றே சொல்லலாம். டெஸ்ட் போட்டிகள்தான் கிரிக்கெட்டின் உயிர் என்பது உண்மை என்றாலும், அதனை கிரிக்கெட் ரசனையுள்ள, ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே ரசித்து பார்க்கமுடியும்.

அதுமட்டுமின்றி 5 நாள்கள் ஒரு விளையாட்டு போட்டியை தொடர்ந்து பார்ப்பதோ, அல்லது ஆடுவதோ பாமரர்களுக்கே எப்போதும் எட்டாத ஒன்றே. இதனால்தான் கிரிக்கெட் அந்த காலகட்டத்தில் மேல்தட்டு வர்க்கத்தினருக்கான போட்டியாக மட்டுமே இருந்தது. ஆனால், அது குறுகிய ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்ட பின்னர்தான் அது வெகுஜன மக்களுக்குமுடையதாக மாறியது.

கிரிக்கெட்டை அழிக்கும் IPL அதிரடி : ஒரே ஆண்டில் மாறிய டி20 கிரிக்கெட்டின் முகம் : ஒரு பகுப்பாய்வு !

கால்பந்து உலகெங்கும் வெற்றிகரமாக பரவ அதன் குறைவான நேரமும், சிறிய இடமும், பந்தும் இருந்தால் போதும் என்றே நிலையே முக்கிய காரணம். ஒரு வேலை 1971-ம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த இந்த மாற்றம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருந்தால் கால்பந்துக்கு நிகரான இடத்தை கிரிக்கெட்டும் பெற்றிருக்கும். 70-களில் 10க்கும் உற்பட்ட நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் ஆடப்பட்ட நிலையில், தற்போது 20க்கும் அதிக நாடுகளில் கிரிக்கெட் முக்கிய விளையாட்டாக மாறியுள்ளது.

ஒரு நாள் போட்டியை ஐசிசி அறிமுகப்படுத்தினாலும் கிரிக்கெட் வீரர்களால் உடனே அந்த மனநிலைக்கு மாறமுடியவில்லை. முதல் ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை தொடரில் கவாஸ்கர் 174 பந்துகளில் 36 ரன் எடுத்த செயல் அப்படி நடந்ததுதான். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னை அந்த வடிவத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு சதமும், 27 அரைசதங்களும் விளாசினார்.

அவர் மட்டுமல்ல, அவர் காலத்தில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் அதிரடிக்கு என புகழ்பெற்றிருந்தார். தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமல்ல, நடுவர்களுக்கும் தலைக்கவசம் கொடுக்கும் அளவுக்கு கிரிக்கெட் வளர்ந்துள்ளது. ஆனால், அப்போது தலைக்கவசம் இன்றியே பேட்ஸ்மேன்கள் ஆடினர்.அதிலும் தலைக்கவசம் இல்லாமல் தலையை நோக்கி வரும் பந்துகளை சிக்ஸர் விளாசும் ஆகாய சூரனாக சிக்ஸர் விளாசி அதிரடிக்கு ஒரு தொடக்கப்புள்ளி வைத்தார் விவ் ரிச்சர்ட்ஸ்.

viv richards
viv richards

பின்னர் ஜெயசூரியா, சேவாக், அப்ரிடி போன்றவர்களின் அதிரடியும் ரசிகர்களுக்கு விருந்தளித்து கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. எனினும் ஒரு நாள் போட்டியும் ஆரம்பத்திலும், இறுதியில் மட்டுமே இந்த அதிரடி ஆட்டம் ஆடப்பட்டு விறுவிறுப்பு நிலை இருந்தது. ஆனால் அதன் பின்னர் வந்த 20 ஓவர் போட்டி அந்த விறுவிறுப்பை போட்டி முழுவதும் கொண்டுவந்தது. பிப்ரவரி 17-ம் 2005- ல் முதல்முறை ஆண்களுக்கான டி20 சர்வதேச போட்டி நடைபெற்றது. அதன் வெற்றியையும், அதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த ஆதரவையும் பார்த்த பிசிசிஐ அமைப்பு, ஐபிஎல் தொடரை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் டி20 போட்டிகளில் 140 ரன்களே வெற்றியை தீர்மானிக்கும் ரன்களாக இருந்தது. அது ஒருகட்டத்தில் 160,180 ஆனது. அவ்வளவு ஏன் 200 ரன்கள் குவித்தால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூட அது வெற்றிக்கு தகுதியான ரன்கள்தான். ஆனால், இந்த ஒரே ஆண்டு ஐபிஎல் தொடரில் டி20 கிரிக்கெட்டின் முகமே மாறிவிட்டது. 250 ரன்கள் கூட பாதுகாப்பானது அல்ல என்றும் சொல்லும் நிலைக்கு டி20 கிரிக்கெட் சென்றுள்ளது.

எப்படி டி20 தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது ரசிகர்ளுக்காகவோ, அதே போல இப்போது 250 ரன்கள் அடிக்கும் அளவு மைதானங்கள் உருவாக்கப்படுவதும் ரசிகர்களுக்கானதே என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இது சாதாரண ரசிகர்களுக்கு கூட ஒரு கட்டத்தில் அலுப்பை ஏற்படுத்துகிறது என்பதை சமூகவலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகள் மூலம் பார்க்க முடிகிறது. கால்பந்தில் கூட தடுப்பாட்டக்காரர்களுக்காக ஆஃப் சைட் போன்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. அது கொண்டுவரப்பட்ட பின்னர் தான் கால்பந்தின் தாக்குதல் ஆட்டக்காரர்களுக்கும்- தடுப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஒரு சமநிலை ஏற்பட்டு, அது இன்னமும் ஆட்டத்தை விறுவிறுப்பாக்கி, ரசிகர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது என்பதை மறக்கக்கூடாது.

கிரிக்கெட்டை அழிக்கும் IPL அதிரடி : ஒரே ஆண்டில் மாறிய டி20 கிரிக்கெட்டின் முகம் : ஒரு பகுப்பாய்வு !

அதனை புரிந்துகொள்ளாமல் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வித வாய்ப்பும் கொடுக்கப்படாமல் வெறும் பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக மட்டுமே கிரிக்கெட் மாறினால் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி அதன் வளர்ச்சிக்கே முற்றுப்புள்ளியாக அமைந்துவிடும். ஏனெனில் கிரிக்கெட்டின் சுவாரஸ்யமே பேட்ஸ்மேன் - பந்துவீச்சாளர்களுக்கு இடையே நடக்கும் அந்த போட்டியே. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் முழுவதுமாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது போல சர்வதேச போட்டிகளிலும் நடக்கும் என்றால் அதன் விளைவுகளை யோசிக்கக்கூட முடியவில்லை. எனினும் சர்வதேச டி20 போட்டிகள் ஐபிஎல் தொடரை போல அல்லாமல் பேட்டிங் - பௌலிங் என இரண்டு தரப்புக்கும் சாதகமாக மாறும் என நம்புவோம்.

Related Stories

Related Stories