விளையாட்டு

ரஞ்சிகோப்பை, துலிப் கோப்பை.. உள்நாட்டு தொடருக்கான பரிசுத்தொகை அதிரடியாக உயர்வு.. BCCI அறிவிப்பு !

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ அமைப்பு அதிரடியாக அதிகரித்துள்ளது.

ரஞ்சிகோப்பை, துலிப் கோப்பை.. உள்நாட்டு தொடருக்கான பரிசுத்தொகை அதிரடியாக உயர்வு.. BCCI அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட்டுக்கு ஆணிவேர் என்றால் உள்ளூர் முதல் தர போட்டியான ரஞ்சி போட்டிதான். இந்திய அணியை குறித்து பேசுபவர்கள் நிச்சயம் ரஞ்சி போட்டி குறித்து கடந்து செல்லாமல் இருக்க முடியாது. இந்திய அணிக்குள் நுழைய வேண்டும் என்றால் அதற்கு ரஞ்சி கோப்பைதான் ஒரே வழி என்று ஒரு காலம் இருந்தது.

ஆனால், ஐபிஎல் வந்த பின்னர் இது எல்லாம் அப்படியே மாறிப்போனது. ஒரு ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடியிருந்தாலே இப்போது எல்லாம் இந்திய அணியில் இடம் கிடைக்கிறது. அதில் பலர் சில போட்டிகளில் மட்டுமே ஜொலித்து காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் ரஞ்சி கோப்பை மூலம் அணியில் இடம்பெறும் வீரர்கள் அப்படி அல்ல.

ரஞ்சிகோப்பை, துலிப் கோப்பை.. உள்நாட்டு தொடருக்கான பரிசுத்தொகை அதிரடியாக உயர்வு.. BCCI அறிவிப்பு !

டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.

தற்போது ஐபிஎல் தொடரில் வீரர்கள் அதிகம் சம்பாதிக்கும் நிலையில், அவர் ரஞ்சி தொடர் போன்ற உள்நாட்டு தொடர்களில் பங்கேற்பதை தவிர்ப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. மேலும், இந்திய உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை மீட்டமைக்க அதனை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிலையில், அதற்கு பிசிசிஐ அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.

ரஞ்சிகோப்பை, துலிப் கோப்பை.. உள்நாட்டு தொடருக்கான பரிசுத்தொகை அதிரடியாக உயர்வு.. BCCI அறிவிப்பு !

அதன் ஒருபகுதியாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ அமைப்பு அதிரடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பரிசுத்தொகை 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், துலீப் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 40 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாகவும், விஜய் ஹசாரே கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 30 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல இரானி கோப்பை தொடரை வெல்பவர்களுக்கு பரிசுத்தொகை 25 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரஞ்சிகோப்பை, துலிப் கோப்பை.. உள்நாட்டு தொடருக்கான பரிசுத்தொகை அதிரடியாக உயர்வு.. BCCI அறிவிப்பு !

இதேபோல பெண்கள் தொடருக்கும் பரிசுத்தொகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீனியர் பெண்கள் ஒரு நாள் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை 6 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இளையோர் கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகையும், ஒட்டுமொத்தமாக அடுத்தடுத்த இடங்களை பிடிக்கும் அணிகளுக்கான பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ அமைப்பின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories