விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆரஞ்சு ஜெர்சியுடன் களமிறங்கும் இந்திய அணி!

ஜூன் 30-ம் தேதி நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து விளையாடவுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆரஞ்சு ஜெர்சியுடன் களமிறங்கும் இந்திய அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பை தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தற்போது ஐ.சி.சி ஒரே நிறத்திலான சீருடையை இரு அணிகளும் அணிந்து விளையாட அனுமதி மறுத்துள்ளது. அதனால் முன்னேற்பாடாக அணியின் பிராதனமாக உள்ள சீருடையின் நிறத்திற்கு மாறுதலாக இரண்டாவதாக ஒரு சீருடையை தயார் செய்யும்படி முன்னதாகவே ஐ.சி.சி உத்தரவிட்டிருந்தது.

தற்போது இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணி வீரர்கள் நீல நிற சீருடையை அணிந்து விளையாடி வருகின்றனர். இதில் இரு அணிகள் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்படும்போது ஏதாவது ஒரு அணி தங்கள் அணியின் இரண்டாவது சீருடையை அணிந்து விளையாட வேண்டும். அதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று உடையில் ஆட வேண்டும்.

இங்கிலாந்து அணி உலகக்கோப்பையில் நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடுகிறது. இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை நடத்துவதால், அந்த அணி அதே ஜெர்சியில் விளையாட முடியும். இதனால் இந்திய அணி ஆரஞ்சு கலர் ஜெர்சியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆரஞ்சு ஜெர்சியுடன் களமிறங்கும் இந்திய அணி!

பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி தங்கள் சட்டைகளின் நிறத்தை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories