விளையாட்டு

IPL 2019 ; சென்னை அணிக்கு பின்னடைவு ,நட்சத்திர வீரர் விலகல்.

ஐபிஎல் 12-வது சீசன் நாளை மறுநாள் (23-ந்தேதி) சென்னை சேப்பாக் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

CHENNAI SUPER KINGS
TWITTER CHENNAI SUPER KINGS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐபிஎல் 12-வது சீசன் நாளை மறுநாள் (23-ந்தேதி) சென்னை சேப்பாக் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது.நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும்பின்னடைவாக, வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

தற்போது இலங்கை அணிக்கெதிராக ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினார். ஐந்தாவது போட்டியின்போது இவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.கடந்த சீசனில் 7 போட்டிகளில் ஆடிய லுங்கி 11 விக்கெட்டுகளை அள்ளினார். அதுவும், அவரது பவுலிங் எகானமி 6 மட்டுமே. ஆகையால், லுங்கி இல்லாதது சிஎஸ்கேவின் பவுலிங் பிரிவில் மிகப்பெரிய சரிவு என்பதில் சந்தேகமேயில்லை.

இவரைத் தவிர, தற்போது அணியில் இருக்கும் ஒரே வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே மட்டுமே. மற்ற ஃபாஸ்ட் பவுலர்கள் அனைவரும் இந்தியர்களே. ஆகையால், லுங்கிக்கு பதிலாக மாற்று பவுலரை களமிறக்கிய வேண்டிய கட்டாயம் சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டு உள்ளது.

கடந்த சீசனில் லுங்கி ங்கிடியின் பந்துவீச்சில் பெரிதும் இம்ப்ரஸ் ஆனவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். லுங்கியின் வேரியேஷன் காட்டும் பந்துவீச்சு, லைன் அன்ட் லென்த் ஆகியவற்றில் தோனிக்கு பரம திருப்தி இருந்தது. அடுத்த சில ஆண்டுகளுக்கு சிஎஸ்கேவுக்கான நிரந்தர ஃபாஸ்ட் பவுலர் கிடைத்துவிட்டார் என்ற ரீதியிலேயே ங்கிடி மீதான தோனியின் அணுகுமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories