அரசியல்

“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!

ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தருவதாக பாஜக கூட்டணி எம்.எல்.ஏ பேசியுள்ளது பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் தற்போது இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இடஒதுக்கீடு முறைக்கு எதிராகவே பல விசயங்களை செய்து வருகிறது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது கூட, பாஜக வேட்பாளர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என பலரும் அரசியலமைப்பு சட்டம் குறித்தும், இடஒதுக்கீடு ரத்து குறித்தும் தெரிவித்திருந்தனர்.

இதனால் அரசியலமைப்பு மிகவும் ஆபத்தில் இருப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டது. தொடர்ந்து இடஒதுக்கீடு ரத்து குறித்து பாஜகவினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனங்களுக்கு உள்ளானது. இந்த சூழலில் அண்மையில் வெளிநாடு சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்கிருந்த பல்கலை. மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

“நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்” - ராகுல் குறித்து பாஜக கூட்டணி MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம்!

அப்போது அதில் ஒரு மாணவர் இந்தியாவில் இருக்கும் இடஒதுக்கீடு முறை குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு ராகுல் காந்தி, “இந்தியா ஒரு நியாயமான இடமாக இருக்கும்போது, இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி யோசிப்போம். ஆனால் இந்தியா ஒரு நியாயமான இடமில்லை” என்று பேசியிருந்தார். இந்த வீடியோவை பாஜகவினர் திரித்து வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், உண்மையை புரிந்துகொள்ளாமல் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற மாதிரி, “இடஒதுக்கீடு ரத்து குறித்து பேசிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும்” என்று மகாராஷ்டிரா பாஜக கூட்டணி சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சியின் எம்.எல்.ஏ., சஞ்சய் கெய்க்வாட் (Sanjay Gaikwad) தெரிவித்துள்ளார்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் எம்.எல்.ஏ ஒருவர் இப்படி பேசியுள்ளது தற்போது கண்டனங்களை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories