அரசியல்

“முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தால் பரபரப்பு !

“முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்”  - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தால் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய பாஜக அரசு தங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைத்தது.

கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாடல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அவருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்த நிலையில், அவர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. அந்த வழக்கில் ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

“முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்”  - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தால் பரபரப்பு !

அந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்தார். அவரை ஏராளமான ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் கூடி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ” டெல்லியில் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. ஆனால் மக்களின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ளாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன். எனவே இன்னும் இரண்டு நாட்களில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்.

நீதிமன்றத்தில் எனக்கான நியாயம் கிடைத்துவிட்டது. இப்போது மக்கள் மன்றத்திலும் எனக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மக்களின் தீர்ப்பிற்கு பிறகு தான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன். நான் குற்றவாளியா, நிரபராதியா? என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories