அரசியல்

“குறு, சிறு தொழில் முனைவோர்கள் காக்கப்பட வேண்டும்” : SEBI சர்ச்சை குறித்து மல்லிகார்ஜுன கார்கே!

செபி அமைப்பை நம்பியிருக்கும், குறு, சிறு தொழில்முனைவோர்களின் முதலீடு காக்கப்பட வேண்டும். செபி மீதுள்ள குற்றச்சாட்டு குறித்த விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் : கார்கே!

“குறு, சிறு தொழில் முனைவோர்கள் காக்கப்பட வேண்டும்” : SEBI சர்ச்சை குறித்து மல்லிகார்ஜுன கார்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அதானி மீது இருக்கிற மோசடிகளை செபி பெருமளவில் கண்டுகொள்ளாமலும், பல வகையில் அதானியை செபி காப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில் நாட்டம் காட்டுவதும் ஏன்? என்ற கேள்வி கடந்த ஓர் ஆண்டு காலமாக நீடித்து வந்தது.

எனினும், அதற்கு சரியான விளக்கம் வெளிப்படாமலே நீடித்து வந்தது. இடையே, மோடியின் நண்பர் என்பதால் இவ்வளவு சலுகைகளா என்ற பேச்சும் எழுந்தது.

இந்நிலையில், மோடியின் நண்பர் என்பதற்காக மட்டுமே சலுகைகள் அல்ல. செபி தலைமை பொறுப்பு வகிக்கும், மதாபி பூரி புச்-ம், அதானி மோசடிகளில் கூட்டு தான் என்பது வெளிப்பட்டுள்ளது.

அதானி குழுமங்களில் உள்ள பங்குதாரர்களில், செபி தலைவர் மதாபி பூரியும் ஒருவர், அவரது கணவர் கூட பங்குதாரர் தான் என அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட தகவல் தான் அந்த வெளிப்பாடு. இதனால், இந்திய பொருளாதாரத்தில் வேறென்ன மோசடிகள் நிகழ்ந்து வருகின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அதானி மோசடிகளில் தகுந்த விசாரணை நடத்தப்படாததற்கு, செபி தலைமையின் கூட்டு வேலையும் காரணம் என்பது அம்பலப்பட்டுள்ளது. இதனால், நீதி கிடைக்குமா என்ற குழப்பம் எழத்தொடங்கியுள்ளது. செபி அமைப்பை நம்பியிருக்கும், குறு, சிறு தொழில்முனைவோர்களின் முதலீடு காக்கப்பட வேண்டும். செபி தலைமை மேல் வைக்கப்பட்டிருக்கிற குற்றச்சாட்டு குறித்த விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, “கடந்த ஆண்டு, அதானி மோசடியில் ஏன் செபி மெளனம் காக்கிறது என நாம் முன்வைத்த கேள்விக்கு, தற்போது ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலளித்துள்ளது. பாதுகாப்பாளர்கள், அழிவு தருபவர்களாகியுள்ளனர். வேடிக்கை பார்த்தவர்கள் திருடர்களாகியுள்ளனர்” விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories