அரசியல்

”நாட்டின் பட்ஜெட் அல்ல இது கூட்டணி பட்ஜெட்" : NDA அரசுக்கு திருச்சி சிவா கண்டனம்!

”ஒன்றிய பட்ஜெட் நாட்டின் பட்ஜெட் அல்ல இது கூட்டணி பட்ஜெட்” என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்.

”நாட்டின் பட்ஜெட் அல்ல இது கூட்டணி பட்ஜெட்" : NDA அரசுக்கு திருச்சி சிவா கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தயா கூட்டணி ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 27 ஆம் தேதி பிரதமரின் தலைமையில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தி.மு.க எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து ஒன்றிய அரசுக்கு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா MP, ”நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு உரியதை மறுத்துள்ளது இந்த பட்ஜெட். ஒன்றிய பட்ஜெட் நாட்டின் பட்ஜெட் அல்ல. இது கூட்டணி பட்ஜெட்.” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், “இது நாற்காலியை பாதுகாக்கும் பட்ஜெட் என்பது அனைவரும் அறிந்ததே. குஜராத் வணிகர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு பணம் கொடுத்த காலம் உண்டு. தற்போது பீகாரின் நிதிஷ் குமாருக்கும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவுக்கும் இதே வியாபாரிகள்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.” என சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி சஞ்சய் ரவுத் கருத்து தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories