அரசியல்

"மெட்ரோ பணிகளுக்காக ஒன்றிய அரசு ஒரு பைசா கூட தரவில்லை" - வானதிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் !

"மெட்ரோ பணிகளுக்காக ஒன்றிய அரசு ஒரு பைசா கூட தரவில்லை" - வானதிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நேற்று முன்தினம் “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் கோவையில் ரூ10,740 கோடி மதிப்பிலும், மதுரையில் ரூ 11,368 கோடி மதிப்பிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வர திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டதாகவும், இதற்கு ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மெட்ரோ ரயில் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் எப்போது பணிகள் தொடங்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

"மெட்ரோ பணிகளுக்காக ஒன்றிய அரசு ஒரு பைசா கூட தரவில்லை" - வானதிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் !

அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "மெட்ரோ ரயில் திட்டம் கோவையில் வருவதற்கு ஆர்வமாக உள்ள கோவை சட்டமன்ற உறுப்பினர், ஏன் இதுவரை ஒன்றிய அரசு இதற்கு உரிய ஒப்புதல் அளிக்க மறுக்கிறது என்பதை கேட்டு சொல்லலாம்.

கோவைக்கு அருகில் உள்ள கொச்சியில் மெட்ரோ ரயில் ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஏன் மறுக்கிறது? . இதுவரை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான செலவான 69 ஆயிரம் கோடி ரூபாய் முழுவதும் மாநில அரசின் சொந்த செலவிலேயே செயல்படுத்தப்பட்டது. இதுவரை மெட்ரோ திட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு ஒரு பைசா கூட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொடுக்கவில்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஒன்றிய அரசிடம் விரைவில் கோவை மெட்ரோ ரயிலுக்கு ஒப்புதல் அளிப்பதுடன் அதற்கான பணத்தையும் வழங்க வலியுறுத்த வேண்டும்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories