உணர்வோசை

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!

அவள், குழு மேலாளர்கள் என்பதை தாண்டி உங்கள் அமைப்பின் பிரச்சனை இது. சாத்தியமற்ற தொடர்ச்சியான வேலைகளும் அழுத்தங்களும் நிலைக்கத்தக்கவை அல்ல. அது மிகத்திறமையான ஒரு இளம் பெண்ணின் உயிரை குடித்திருக்கிறது.

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரள மாநிலத்தை சேர்ந்த அன்னா செபாஸ்டியன் பட்டய கணக்காளர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எர்னெஸ்ட் & யங் (Ernst & Young -EY ) என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்படக்கூடிய மிகப்பெரிய நான்காவது அக்கவுண்டிங் நிறுவனமாகும். நான்கு மாதங்களாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அன்னா செபாஸ்டியனுக்கு பணிச்சுமை ஏற்படும் வகையில் அதிகமான வேலை வழங்கப்பட்டதாகவும், அதனால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதுவே அவரது இறப்புக்கு காரணம் என்றும் அவரது தாயார் அனிதா குற்றம் சாட்டியுள்ளார்.

எந்த நிறுவனத்திற்காக எனது மகள் விழுந்து விழுந்து வேலை பார்த்தாலோ அவளது இறுதி சடங்குக்கு அவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து ஒருவர் கூட வரவில்லை என கண்ணீர் மல்க அவர் தன்னுடைய கடிதத்தில் வேதனையை தெரிவித்துள்ளார்.

அனிதா அகஸ்டின்
அனிதா அகஸ்டின்

தனது மகளை இழந்த அனிதா அகஸ்டின் உருக்கமுடன் எழுதிய கடிதம் பின்வருமாறு :-

அனுப்புநர்,

அனிதா அகஸ்டின். இறந்துபோன மிஸ் அன்னா செபாஸ்டியன் பெரயில்-ன் தாய். 21.09.2024

பெறுநர்

ராஜீவ் மேமானி, எர்னஸ்ட் அண்ட் யங் (EY) இந்தியா சேர்மன்.

அன்புள்ள ராஜீவ்,

அன்னா செபாஸ்டியன் பெரயில் என்கிற மதிப்புமிக்க குழந்தையை இழந்து தவிக்கும் தாயாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த கடிதத்தை எழுதும்போது என் மனம் கனத்துக்கிடக்கிறது. எனது ஆன்மா சிதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த கொடுமை எந்த ஒரு குடும்பத்திற்கும் நிகழக் கூடாது என்ற நம்பிக்கையில் இதை நான் எழுதுகிறேன்.

அன்னா, அவளது சி.ஏ படிப்பை நவம்பர் 23ல் முடித்தாள். 2024 மார்ச் 19 புனே EY-ல் அதிகாரியாக சேர்ந்தாள். அவள் வாழ்க்கையை முழுமையாக நேசித்தாள். ஏராளமான கனவுகளோடு இருந்தாள். எதிர்காலத்தைப் பற்றிய ஆர்வத்தோடு இருந்தாள். EY தான் அவளது முதல் வேலை. புகழ்மிக்க கம்பெனியின் பகுதியாக இருப்பது அவளுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், நான்கு மாதங்களுக்கு பிறகு ஜூலை 20, 2024 என் உலகமே இடிந்து விழுந்தது. அன்று தான் மிகத் துயரமான செய்தி, அன்னா இறந்துவிட்டாள் என்கிற செய்தி என்னிடம் வந்தடைந்தது. அவள் 26 வயதுக்காரி.

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!

சிறுவயதிலும் சரி, படிப்பின்போதும் அவள் போராளியாகவே இருந்தாள். எதில் எல்லாம் அவள் போட்டியிட்டாலோ அதில் எல்லாம் சிறப்பாக விளங்கினாள். பள்ளி படிப்பில் முதலிடம் பெற்றாள். கல்லூரியிலும் அப்படித்தான். படிப்பிற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கினாள். சி.ஏ-விலும் டிஸ்டிங்ஷனில் தேறினாள். EY-ல் இடைவிடாது உழைத்தாள். அவளிடம் என்ன முன்வைக்கப்பட்டாலும் அதை செய்து முடிப்பாள். ஆனால், வேலைப் பளு, புதிய சூழல், கூடுதல் வேலை நேரம் அவளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் கடுமையாக பாதித்திருக்கிறது. அவள் பதட்டத்துடனேயே இருந்தாள். தூக்கமின்றி இருந்தாள். கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானாள். இவையெல்லாம் வேலையில் சேர்ந்தபிறகுதான். ஆயினும் அவள் விட்டுக் கொடுக்கவில்லை. கடின உழைப்பும், விடா முயற்சியும் தான் வெற்றியின் திறவுகோள் என நம்பிக் கொண்டிருந்தாள்.

நானும், என் கணவரும் ஜூலை 6 சனிக்கிழமை அன்று அவளது பட்டமளிப்பு விழாவிற்காக புனே சென்றிருந்தோம். அவள் பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த வீட்டிற்கு இரவு 1 மணி போலத்தான் கடந்த ஒருவார காலமாக வந்ததாக சொன்னாள். அதனால், நெஞ்செரிச்சல் இருப்பதாக சொன்னாள். அவளை புனேவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அவளது இ.சி.ஜி இயல்பானதாக இருந்தது. இதய நிபுணர் எதுவும் பிரச்சனை இல்லை என்று சொன்னார். அவளுக்கு தூக்கம் இல்லாததும், மிகவும் காலதாமதமாக சாப்பிடுவதும் தான் காரணம் என்று சொன்னார்.

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!

நெஞ்செரிச்சலுக்கு மட்டும் ஒரு மருந்து கொடுத்துவிட்டு வேறெந்த பிரச்சனையும் இல்லை என்றார். நாங்கள் கொச்சியிலிருந்து வந்திருந்தபோதும் மருத்துவரை சந்தித்த பிறகு வேலைக்கு சென்றுவிட்டாள். ஏராளமான வேலை பாக்கி இருப்பதாகவும், அதனால் விடுமுறை கிடைக்காது என்று கூறினாள். அன்று இரவும் பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த இடத்திற்கு மிகவும் கால தாமதமாகவே வந்தாள். அடுத்தநாள் ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அவளுக்கு பட்டமளிப்பு நாள். காலையில் எங்களோடு இணைந்திருந்தாள். அன்று பிற்பகல் வரை வீட்டிலிருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தாள். பட்டமளிப்பு விழாவிற்கு தாமதமாகவே சென்றோம்.

அவளுடைய பட்டமளிப்பு விழாவிற்கு அவள் சம்பாதித்த பணத்தில் தன் பெற்றோரை அழைத்து வர வேண்டுமென்பது அவளது கனவாக இருந்தது. எங்களுக்கு விமான பயணத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அழைத்திருந்தாள். உடைந்து போன இதயத்தோடு நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நாங்கள் இருவரும் அவளோடு கழித்த அந்த இரண்டு நாட்களும் கூட வேலை பளுவின் காரணமாக அவளால் அதை அனுபவிக்க முடியவில்லை.

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!

அந்த குறிப்பிட்ட குழுவில் அன்னா சேர்ந்த பிறகு அந்த குழுவிலிருந்த பலரும் கடுமையான வேலை பளுவால் ராஜினாமா செய்துவிட்டதாக பல ஊழியர்களும் சொல்லியிருக்கிறார்கள். அந்த குழுவின் மேலாளர் “அன்னா நம்முடைய குழுவைப் பற்றி பலரும் பேசுவதை மாற்றுவதற்கு நீ முயற்சிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். என் குழந்தை அதற்காக அவளது உயிரையே கொடுக்க வேண்டியிருக்கும் என்று அப்போது புரிந்து கொள்ளவில்லை.

அவளுடைய மேலாளர் கூட்ட நேரங்களை அடிக்கடி மாற்றி விடுவார். குறிப்பாக, கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது, அவளுக்கான வேலையை வேலை நேரம் முடியும்போது கூடுதல் வேலை கொடுத்து மன அழுத்தத்தை அதிகரித்திருக்கிறார். ஒரு அலுவலக விருந்தின்போது ஒரு மூத்த நிர்வாகி அந்த மேலாளருக்கு கீழே வேலை செய்வது மிகவும் கடினமானது என்று கூறியிருக்கிறார். துரதிஷ்டவசமாக அதுதான் எதார்த்தமாக இருந்திருக்கிறது. அதிலிருந்து அவளால் தப்ப முடியவில்லை.

கடுமையான வேலைப் பளுவைப் பற்றி அன்னா எங்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருக்கிறாள். குறிப்பாக, வேலை நேரத்திற்கு அப்பால் வாய்மொழியாக சொல்லப்படும் அலுவலக வேலைகள் அத்தகைய வேலைகளை பார்க்க வேண்டாம் என அவளிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், மேலாளர்கள் விடுவதாக இல்லை. இரவில் வெகுநேரம் உழைத்திருக்கிறாள். வார விடுமுறை நாட்களும் தப்பவில்லை. மூச்சுவிடக் கூட நேரமின்றி குழந்தை தவித்திருக்கிறாள். அவளது துணை மேலாளர் ஒருநாள் இரவு அழைத்து அடுத்தநாள் காலைக்குள் ஒரு வேலையை முடித்துவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறாள். ஓய்வு எடுக்கவோ, இழந்த சக்தியை மீண்டும் பெறவோ அவளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இதைப் பற்றி அவர்களிடம் அவள் சொன்னபோது அவர்கள் அதை “நீ இரவில் வேலை பார்க்கலாம், நாங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்” என்று அது ஒரு பொருட்டே இல்லை என்று பேசியிருக்கிறார்கள்.

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!

அன்னா தங்குமிடத்திற்கு வரும்போது முற்றிலும் சக்தி இழந்தவளாகவே வந்திருக்கிறாள். அணிந்த உடைகளைக் களையாமலேயே படுக்கையில் விழுந்திருக்கிறாள். ஆனாலும் பல நேரங்களில் கூடுதல் ரிப்போர்ட்களை கேட்டு குறுஞ்செய்திகளாக வந்து குவிந்திருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைகளை முடிப்பதற்கு கடினமாக உழைத்திருக்கிறாள். தன்னால் ஆன அனைத்தையும் செய்திருக்கிறாள். அவள் இயல்பிலேயே ஒரு போராட்டக்காரி. எதையும் எளிதாக விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாதவள். நாங்கள் அவளிடம் வேலையை விட்டுவிட சொன்னோம். ஆனால், அவள் ஏற்கவில்லை. கற்றுக் கொள்ள விரும்பினாள். புதிய பகுதிகளில் தனக்கு அறிமுகம் கிடைக்கும் என்று கருதினாள். ஆனாலும் அவளுக்கு இந்த கடுமையான அழுத்தங்களை தாங்க முடியவில்லை.

அன்னா, அவளது மேலாளர்களை ஒருபோதும் குறை சொன்னது கிடையாது. அவள் மிகவும் அன்பானவள். ஆனால், நான் அமைதியாக இருக்க முடியாது. புதிதாக வருகிறவர்கள் மீது இடுப்பு ஒடிக்கும் வேலைகளுக்கும் மற்றும் இரவும் பகலுமாக வேலை செய்ய வைப்பதற்கும் ஞாயிற்றுக்கிழமையும் கூட வேலை செய்ய வைப்பதற்கும் எந்த நியாயமும் கிடையாது.

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!

தன்னை நேசித்தவர்களையும், சொந்த ஊரையும் விட்டு சென்றிருந்தாள். ஒவ்வொன்றும் அவளுக்கு புதிது. அந்த நிறுவனம், அந்த இடம், அந்த மொழி, அனைத்தும் புதிது. அவற்றையெல்லாம் பழகிக்கொள்ள அவள் கடுமையாக முயற்சித்தாள். நீங்கள் உங்கள் புதிய தொழிலாளிகளுக்கு சற்றுக் கருணை காட்ட வேண்டும். மாறாக, அவள் புதியவள், ஒதுக்கப்பட்ட வேலையும் அதற்கு அதிகமான வேலையும் செய்பவள் என்பதை நீங்கள் சாதகமாக எடுத்துக் கொண்டீர்கள்.

அவள் இருந்த குழு மேலாளர்கள் என்பதை தாண்டி உங்கள் அமைப்பின் பிரச்சனை இது. சாத்தியமற்ற தொடர்ச்சியான வேலைகளும் அழுத்தங்களும் நிலைக்கத்தக்கவை அல்ல. அது மிகத்திறமையான ஒரு இளம் பெண்ணின் உயிரை குடித்திருக்கிறது.

அன்னா, ஒரு இளம் தொழில்சார் பணியாளர். அவளது பணிசார் வாழ்க்கையை அப்போதுதான் தொடங்குகிறாள். அவளது நிலையிலிருந்த பலரையும் போலவே அவளுக்கு அனுபவம் கிடையாது. அல்லது நியாயமற்ற வேலைப் பளுவை ஏற்க மாட்டேன் என்று சொல்ல தெரியவில்லை. முடியாது என்பதை சொல்வதற்கு அவளுக்கு தெரியவில்லை.

புதிய சூழலில் அவளை நிலைநிறுத்துவதற்காக அவள் முயற்சித்திருக்கிறாள். அந்த முயற்சியில் அவளுடைய எல்லைகளை தாண்டி அவளை தள்ளியிருக்கிறார்கள். இதோ அவள் இப்போது நம்மோடு இல்லை.

நான் அவளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். அவளிடம் அவளுடைய நலனும், உடல் நலமுமே வேறெதையும் விட முக்கியமானது என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், மிகவும் காலதாமதமாகிவிட்டது.

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!

ராஜீவ், நான் ஏன் இதை உங்களுக்கு எழுதுகிறேன் என்றால் EY-க்கு அதன் தொழிலாளர்களின் நலனை உத்தரவாதப்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அன்னாவின் அனுபவம், உங்களுடைய வேலை கலாச்சாரம், பணியில் இருக்கும் ஊழியர்களின் நலனை புறக்கணித்து வேலைப் பளுவை கொண்டாடும் வேலை கலாச்சாரமாக இருக்கிறது. இது என் மகளைப் பற்றியது மட்டுமல்ல.

கனவுகளோடும், நம்பிக்கைகளோடும் EY-ல் பணிக்கு சேரும் திறமைசார் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் பற்றியது. அவர்களின் கனவுகளையும் நம்பிக்கைகளையும் காரிய சாத்தியமற்ற எதிர்ப்பார்ப்புகளின் சுமையால் நசுக்கி விடாதீர்கள். உங்கள் நிறுவனத்தின் மனித உரிமைகள் பற்றிய ஆவணத்தை படித்தேன். அதில் உங்கள் கையெழுத்து இருக்கிறது. அதில் சொல்லப்பட்டுள்ள விழுமியங்களுக்கும் என் மகள் எதிர்கொண்ட எதார்த்தத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நீங்கள் சொல்லியிருப்பவற்றை எப்போது அமல்படுத்தப் போகிறீர்கள்?

அன்னாவின் மரணத்திலாவது நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். உங்கள் நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் நலன்கள் உங்களது பணிக் கலாச்சாரத்தில் பிரதிபலிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுங்கள்.

இதன் பொருள் உங்கள் நிறுவன தொழிலாளர்கள் தைரியமாக பேசலாம் என்கிற நிலைமையை உருவாக்குங்கள்.

அவர்களது வேலைப் பளு குறித்த பிரச்சனைகளில் அவர்களுக்கு உதவுங்கள்.

வேலை திறனுக்காக அவர்களின் உடல்நலத்தையும், மன நலனையும் காவு கொடுக்காதீர்கள்.

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!

அன்னாவின் இறுதி நிகழ்ச்சியில் உங்கள் நிறுவனத்திலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படியொரு துயரமான தருணத்தில் அவளது இறுதிமூச்சு வரை உங்கள் நிறுவனத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒருத்தியின் இறுதி நிகழ்ச்சியில் நீங்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை என்பது என்னை கடுமையாக பாதித்தது.

அன்னா மட்டுமல்ல, உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் எந்த தொழிலாளியும் இவ்வளவு மோசமாக நடத்தப்படக் கூடாது. என் இதயம் வலிக்கிறது. என் மகளின் இழப்புக்காக மட்டுமல்ல, அவளை வழிநடத்தியிருக்க வேண்டியவர்கள், ஆதரவளித்திருக்க வேண்டியவர்களின் கருணையற்ற தன்மைக்காகவும் என் மனது வலிக்கிறது. அவளுடைய இறுதி நிகழ்ச்சி பிறகு அவளது மேலாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால், யாருமே பதிலளிக்கவில்லை. மனித உரிமைகள் பற்றியும், விழுமியங்களை பற்றியும் பேசுகிற ஒரு நிறுவனம் தன் நிறுவனத்தில் இருந்த ஒருவரின் இறுதி நிகழ்ச்சியில் காட்டிய இந்த அலட்சியத்தை எப்படி புரிந்து கொள்வது?

ஒரு பட்டய கணக்காளராக மாறுவதற்கு வருடக் கணக்கில் கடின உழைப்பு தேவை. சம்பந்தப்பட்ட மாணவர் மட்டுமின்றி அவரது பெற்றோர்களும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, சிரமப்பட வேண்டியிருக்கிறது. தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. என் குழந்தையின் பல ஆண்டு கடினமான உழைப்பு EY -ல் இருந்த நான்கு மாத காலத்தில் உங்களின் இரக்கமற்ற அணுகுமுறையால் பறிக்கப்பட்டுவிட்டது.

“எங்கள் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது” : வேலை பளுவிற்கு தன் மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் கடிதம்!

இந்த கடிதம் இதற்கு உரிய முக்கியத்துவத்தோடு உங்களிடம் வந்தடையும் என்று நம்புகிறேன். தன் கைகளில் அவளை ஏந்திய, அவளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்த, அவளோடு விளையாடிய, அழுத, கனவுகளை பரிமாறிக் கொண்ட ஒரு தாய் தன் கையாலேயே அந்த குழந்தையை புதைத்துவிட்டு வரும்போது ஏற்படும் உணர்வு இதே போன்ற அனுபவத்தை அடைந்தவர்களை தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

நாங்கள் அனுபவித்த துயரத்தையும், வலியையும் போல வேறு யாருடைய குழந்தையும் அனுபவிக்காமல் இருக்க வேண்டுமென்றால் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். என்னுடைய அன்னா எங்களோடு இப்போது இல்லை. ஆனால் அவளை பற்றிய இந்த செய்தி நிச்சயமாக ஒரு மாற்றத்தை தரும்.

அன்புடன்.

அனிதா அகஸ்டியன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories