உணர்வோசை

தொழில்நுட்பக் காதலோ யதார்த்தக் காதலோ, பாதிப்பு பெண்களுக்குதான்... பெண்ணை தவறாக புரிந்துகொள்ளும் ஆண்கள் !

கடகடவென பிறரிடம் பேசும் பெண்களை நம் சிந்தைகள் மறுக்கின்றன. பொறுமை காக்க தவறுகின்றன. பெண்ணுக்கும் தொழில்நுட்பத்தின் வழியாக ஆணைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது.

தொழில்நுட்பக் காதலோ யதார்த்தக் காதலோ, பாதிப்பு பெண்களுக்குதான்... பெண்ணை தவறாக புரிந்துகொள்ளும் ஆண்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகமயமாக்கல், சமூகதளங்கள் போன்றவை காதலுறவுகளின் வடிவங்களை தீர்மானிக்கின்றன. அவை பல நேரங்களில் நாம் எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது.

வாட்சப் மெசேஜுக்கு ப்ளூ டிக் வந்தும் ரிப்ளை வரவில்லை எனில் அடுத்த காதல் மெசேஜ் அடுத்த contact-க்கு செல்கிறது. அல்லது ஒரு சண்டை சூல் கொள்கிறது.

காதலை வெளிப்படுத்தும் விதம் மால்கள், சுற்றுலா, பரிசு பொருட்கள், சர்ப்ரைஸ்கள் என மாறி இருக்கின்றன. திருமணமே ஒரு சினிமாத்தன ஏற்பாடாக செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தினமும் லைக் பெறவென காதல் கொட்டும் புகைப்படங்களை கொட்ட வேண்டியிருக்கிறது. தம்பதியின் காதல் பதிவுகளுக்கு லைக்குகள் குறையத் தொடங்குகையில் காதலுறவில் சுணக்கம் தோன்றத் தொடங்குகிறது.

தொழில்நுட்பக் காதலோ யதார்த்தக் காதலோ, பாதிப்பு பெண்களுக்குதான்... பெண்ணை தவறாக புரிந்துகொள்ளும் ஆண்கள் !

நித்தம் ஒரு காதல் அனுபவம், நிர்பந்தமாக மாற்றப்பட்டிருக்கிறது. நிர்பந்தம் கூடி காதல் பலூனுக்குள் காற்று நிறைந்து அழுத்தம் அதிகரித்து சீக்கிரமே வெடிக்கும் கட்டத்தை எட்டி விடுகிறது.

காதல் பூவை தினமும் புகை போட்டு பூக்க வைக்கிறார்கள். இருத்தலே காதல் என்ற நிலை மாறி அறிவித்துக் கொண்டிருத்தலே காதல் என்கிற கட்டத்தை அடைந்திருக்கிறோம்.

மேலும் டேட்டிங் என்பதை பழகிப் பார்த்தல் எனக் கொண்டால் அது நம் சமூகத்தின் எல்லா வர்க்கங்களிலும் இருப்பதுதான். பலர் அதை காதல் எனப் புரிந்து கொண்டு ஏமாறுகின்றனர். பல நேரங்களில் பழகிய கொஞ்ச நாட்களிலேயே காதலிக்க தொடங்கி விடுகின்றனர்.

தொழில்நுட்பக் காதலோ யதார்த்தக் காதலோ, பாதிப்பு பெண்களுக்குதான்... பெண்ணை தவறாக புரிந்துகொள்ளும் ஆண்கள் !

பழகி பார்த்தலுக்கென ஒரு காலம் கொடுத்தல் வேண்டும். அதற்கான காலம் இருக்கவே செய்கிறது. ஆனால் நமக்கு இருக்கும் பதட்டத்தில் அந்த உறவை சீக்கிரமாக காதல் என முத்திரை குத்தி அடையாளப்படுத்தி விட விழைகிறோம். அவ்வளவுதான்.

காதலைத் தொடங்காமலே காதலிக்கத் தொடங்கி விடுகிறோம்.

காதலிக்கலாமா என பெண் யோசிப்பதையே காதலிக்க பெண் சம்மதித்து விட்டதாக புரிந்து கொள்கிறோம். காதலிக்கலாமா என பெண் நம்மை மட்டுமல்ல, பலரையும் யோசிப்பார் என்பதையும் அந்தப் பட்டியலில் நாம் ஒருவர்தான் என்பதையும் மறந்துவிடுகிறோம்.

நம்மின் குணங்களை ஆராயப் பேசுவது போலவே அவர் பிறரிடமும் ஆராயப் பேசுகையில் நமக்குள் இருக்கும் பாதுகாப்பின்மை விழித்துக் கொள்கிறது. சந்தேகம் என்கிற முகத்தை மாட்டிக் கொண்டு அச்சம் என்கிற முகத்தை மறைத்துக் கொள்ள, பெண் ஒழுங்கில்லை என்ற சாயத்தைப் பூசுகிறது.

தொழில்நுட்பக் காதலோ யதார்த்தக் காதலோ, பாதிப்பு பெண்களுக்குதான்... பெண்ணை தவறாக புரிந்துகொள்ளும் ஆண்கள் !

கடகடவென பிறரிடம் பேசும் பெண்களை நம் சிந்தைகள் மறுக்கின்றன. பொறுமை காக்க தவறுகின்றன. பெண்ணுக்கும் தொழில்நுட்பத்தின் வழியாக ஆணைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது.

பெண் பேசுகிற ஆண் விடும் பிம்பக் கண்ணீரும் சொல்லும் துயரக் கதையும் உண்மையா என்பது பெண்ணுக்கு தெரிவதில்லை. பெண்ணை தன் வழிக்குக் கொண்டு வர ஆண் போடும் திட்டத்தின் ஒரு பகுதிதான் அவை என புரியாமல் அப்பாவிப் பெண்கள் காதலுறவுக்கு ஒப்புக் கொள்கின்றனர். உணமையை சோதித்தறியும் பெண்கள் ஆண்கள் சூட்டும் அவப்பெயர்களுக்கு ஆளாகின்றனர்.

தொழில்நுட்பக் காதலோ யதார்த்தக் காதலோ இன்றைய சூழலில் கொண்டிருக்கும் சிக்கல்கள் அதிகம்தான். இரண்டிலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்தான்.

banner

Related Stories

Related Stories