முரசொலி தலையங்கம்

“திட்டமிட்ட வடமாநிலப் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!

‘’பா.ஜ.க. என்பது அகில இந்தியக் கட்சி அல்ல, அது வடமாநிலத்தவர் கட்சி’’ என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அடிக்கடி சொல்வார். அதைத்தான் இது நிரூபிக்கிறது.

“திட்டமிட்ட வடமாநிலப் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழர்க்கே வேலை!

மிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு மற்றும் பொதுத் துறை பணி நியமனங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல; தமிழின உரிமையின் குரலாக இது அமைந்துள்ளது.

“தமிழ்நாட்டில், ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்திட வேண்டும்” என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‘’நாட்டில் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதி செய்திட முடியும்.

“திட்டமிட்ட வடமாநிலப் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!

ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்களில் சேருவதற்கான அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற முடியும். நல்ல நிர்வாகத்திற்கு பொதுமக்களுடன் இணக்கமாகப் பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாச்சாரத்தில் பரிச்சயம் போன்றவை முக்கியமானவை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்கள்.

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அறிக்கையில், பணியாளர் தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில், 4.5 சதவீதம் அளவில் மட்டுமே தென் மண்டலத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தென் மண்டலத்தில் இரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. இது வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

“திட்டமிட்ட வடமாநிலப் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!

இந்தச் சூழ்நிலையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திடும் வகையில் தமிழ்நாட்டில், ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்திடவும், தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும், தமிழ்நாட்டிலுள்ள இரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு, 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனங்களில், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளித்திடவும் வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது காலத்தின் கட்டளையான கோரிக்கையாகும். தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். ஒன்றிய அரசுப் பணிகளில், குறிப்பாக; தென்னக ரயில்வேயின் பல்வேறு பணிகளிலும் தொழிற்சாலைகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களை பணிக்குத் தேர்வு செய்வது சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகிறது.

“திட்டமிட்ட வடமாநிலப் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!

கொரோனா காலத்தில் இத்தகைய தேர்வுகள் அதிகமாக நடந்தன. ரயில்வே பணிக்காக எடுக்கப்பட்ட 2 ஆயிரம் பேரில் 1500 பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு பேருக்கு ‘இ-பாஸ்’ எப்படி தரப்பட்டது என்பதே அப்போது பெரும் சர்ச்சை ஆனது. தமிழக அஞ்சல் துறையின் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்ற 946 பேரில் ஒரு பெயர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பெயர் இல்லை என்ற தகவலும் ஓராண்டுக்குமுன் வெளியானது.

நெய்வேலி என்.எல்.சி.யில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்கள் அனைவரும் வட மாநிலத்தவர்கள். இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு 30 தமிழர் கிராம மக்கள், தங்களது நிலங்களை அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான். ஆனால், அப்படியான உறுதிமொழியை ஒன்றிய அரசும், என்.எல்.சி. நிர்வாகமும் தொடர்ந்து மீறி வருகின்றன.

“திட்டமிட்ட வடமாநிலப் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!

ஒன்றிய அரசு நிறுவனங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் டெல்லி, உ.பி, அரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலத்தவர் அதிகம் சேர்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலகத் துறை நடத்திய தேர்வில் வட மாநிலத்தவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள். இவர்கள் தமிழ்ப் பாடத்தில் 25க்கு 24 மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டுப் பணியிடங்களில் சேர்வதற்காக போலியான ஆவணங்களைக் கொடுத்து, 20 பேர் சிக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக தேர்வுத்துறை வழங்கியது போல் போலி ஆவணம் கொடுத்து ஒன்றிய அரசுப்பணிகளில் பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவர்கள் சேர்ந்து உள்ளதாக தகவல் வெளியானது. யு.பி.எஸ்.சி. கொடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் போலிச் சான்றிதழ்கள் என அரசு தேர்வுகள் துறை உறுதி செய்து உள்ளது.

“திட்டமிட்ட வடமாநிலப் படையெடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!

போலிச் சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க அரசு தேர்வுகள் துறை அஞ்சலகத் துறைக்குப் பரிந்துரை செய்து உள்ளது. போலிச் சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது. தென்னக ரயில்வேயில் திருச்சிப்பணிமனைக்கு விண்ணப்பித்த 8000 விண்ணப்பங்களில், 5000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள். மொத்தம் 1,765 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதி 10ஆம் வகுப்பு. இதில் 1,600 இடங்களை வட மாநில இளைஞர்கள் வாரிச் சுருட்டியுள்ளனர். 10 சதவிகிதத்திற்கும் குறைவாக வெறும் 165 இடங்களை மட்டுமே தமிழக இளைஞர்கள் தக்க வைத்துள்ளனர் என்ற செய்தியும் வெளியானது.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)

தொழில் பழகுநர் பயிற்சி முடித்தும், வேலை கிடைக்காத 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். “வடமாநிலங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் துணையுடன், தொடர்ச்சியாக தமிழகத்தில் இதுபோன்ற பணி நியமனங்கள் நடந்து வருகின்றன” என்று புகார் கொடுத்தார்கள்.

இத்தகைய திட்டமிட்ட வடமாநிலப் படையெடுப்புக்கு எதிராகத்தான் முதலமைச்சர் குரல் கொடுத்துள்ளார். ‘’பா.ஜ.க. என்பது அகில இந்தியக் கட்சி அல்ல, அது வடமாநிலத்தவர் கட்சி’’ என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அடிக்கடி சொல்வார். அதைத்தான் இது நிரூபிக்கிறது.

Related Stories

Related Stories